வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அயோத்தி பட நடிகையுடன் ஜோடி சேரும் கவின்.. டாடா வெற்றிக்குப் பிறகு இணையும் கூட்டணி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக ஜொலிக்க முடியும் என்பதற்கு சிவகார்த்திகேயன் எடுத்துக்காட்டாக இருக்கிறார். இப்போது பலர் அந்த வரிசையில் ஹிரோவாக சாதித்து வருகிறார்கள். அப்படி விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் கவின்.

அதன் பின்பு இவருக்கு சரவணன் மீனாட்சி தொடர் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு இருந்த நல்ல பெயரை கவின் கெடுத்து கொண்டார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

Also Read : 3 ஹீரோக்களின் இடத்தை பிடிக்கும் கவின்.. ஒரே ஹிட்டால் புரட்டிப்போட்ட சினிமா கேரியர்

ஆனால் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் ஆடியது. இந்த படத்தின் மூலம் கவினுக்கு நல்ல பெயர் தமிழ் சினிமாவில் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்த பட வாய்ப்பு இவருக்கு வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் டாடாவை போல் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் அயோத்தி. சசிகுமார் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் டாடா கவினுக்கு ஜோடியாக இவர் புதிய படத்தில் நடிக்கிறார்.

Also Read : வந்த வேகத்திலேயே காணாமல் போன கூட்டணி.. பெரும் மன உளைச்சலில் இருக்கும் கவின்

மேலும் இந்தப் படத்தில் நடன இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான சதீஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், பின்பு நடன இயக்குனராகவும் பணியாற்று இருந்தார்.

முதல்முறையாக இந்த கூட்டணி உருவாகி உள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதுமட்டும்இன்றி அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது. ஆகையால் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

Also Read : கவின் முக்கியமல்ல, தனுஷ் தான் முக்கியம்.. சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத் 

Trending News