வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய், லைக்காவிடமிருந்து ஒதுங்கி இருப்பதன் பின்னணி.. பிரச்சனையில் சிக்கிய வரை காப்பாற்றிய அண்ணன்

Actor Vijay and Lyca Production: தயாரிப்பு நிறுவனங்களில் தவிர்க்க முடியாத பெரிய நிறுவனமாக லைக்கா இருந்து வருகிறது. முக்கியமாக டாப் நடிகர்களின் படங்களை தயாரித்து அதில் அதிக லாபத்தை பார்த்து வருகிறது. அப்படிப்பட்ட இவர்களிடமிருந்து விஜய் பல வருடங்களாக ஒதுங்கியே இருக்கிறார். அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதாவது விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி திரைப்படம் பல போராட்டங்களை சந்தித்தது. இப்படத்தை வெளியிட முடியாத அளவிற்கு பல சவால்களை எதிர்கொண்டது. முக்கியமாக தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று எல்லா பக்கமும் போர்க்கொடியை தூக்கினார்கள்.

Also read: விஜய் பற்றி பெருமையாக பேசிய அட்லி, கட் செய்ததா சன் டிவி.? நம்பியாராக மாறி வில்லத்தனம் செய்த கமலின் கூட்டாளி

அதற்கு காரணம் இந்த படத்தை தயாரித்த சுபாஸ்காரன் இலங்கை வாழ் தமிழர் மற்றும் தொழிலதிபரான லைக்கா நிறுவனம் என்பதால். அதனாலேயே கத்தி படத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அப்பொழுது விஜய், பிரச்சினையே சமாளிக்க முடியாமல் திக்கு முக்காடி திணறிக்கொண்டு இருந்தார்.

ஏற்கனவே இதற்கு முன்னதாக நடித்த தலைவா படமும் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது. அதை போராடி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெளியில் வந்தது. அதேபோல் கத்தி படமும் வெளியிட முடியாத அளவிற்கு எல்லா பக்கமும் தடங்கல்கள் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இவருக்கு பக்கபலமாக இருந்து பிரச்சனையை தீர்த்து வைத்தவர் அண்ணன்.

Also read: விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

அதாவது விஜய்யை தமிழனாக பாருங்கள், தமிழர் நடித்த படத்தையே இப்படி எதிர்த்துக்கொண்டு போராட வேண்டிய அவசியம் என்ன. அவர் எனக்கு தம்பி மாதிரி என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி கத்தி படத்திற்கு வந்த பிரச்சனைக்கு முடிவு கட்டினார். அவர் வேறு யாரும் இல்லை நாம் தமிழர் கட்சி மற்றும் இயக்குனர் சீமான் அண்ணன் தான்.

அதன் பின்னே கத்தி படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து பிரச்சனையே வேண்டாம் என்று லைக்காவிற்கு கால் சீட் கொடுக்காமலேயே ஒதுங்கி வருகிறார் விஜய். அப்படி இருக்கும் பொழுது தற்போது இவருடைய மகன் இயக்குனராக அவதரித்த பொழுதே லைக்காவிடம் கூட்டணி வைக்க இருக்கிறார்.

Also read: ஜெட் வேகத்தில் எகிறிய ரஜினியின் சம்பளம்.. விஜய்க்கு பதிலடி கொடுக்க தலைவர் 171 படத்திற்கு வாரி இறைக்கும் சன் பிக்சர்ஸ்

Trending News