புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோ போல் 15 ஆண்களுக்கு வலை விரித்த சத்யா.. அதிரடி கைதில் இருக்கும் பின்னணி

Sathya Case: தினம் தினம் குற்ற செயல்கள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதில் கொலை, கொள்ளையில் ஆரம்பித்து பண மோசடி, திருமண மோசடி என நாளுக்கு நாள் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

அதில் பல பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சத்யா வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது பல ஆண்களை ஏமாற்றிய கல்யாண ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ் அரவிந்துக்கு சத்யா ஒரு செல்போன் ஆப் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். அதிலிருந்து நண்பர்களாக பழகத் தொடங்கி காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர். காதலித்த காலத்தில் மகேஷ் அவருக்கு நிறைய பணத்தை கொடுத்து இருக்கிறார்.

அதேபோல் திருமணத்திற்கு 12 பவுனில் தாலிக்கொடி போட்டிருக்கின்றனர். அதன் பிறகு ஒரு வாரம் கடந்த நிலையில் சத்யா அடிக்கடி செல்போனில் பேசுவதை அவர் கண்காணித்திருக்கிறார். அதை தொடர்ந்து அவருடைய செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

திருமண மோசடி செய்த சத்யா

அதாவது சத்யா பல ஆண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து இருக்கிறார். அதேபோல் பலரை காதல் வலையிலும் வீழ்த்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் அனைத்தும் செல்போனில் இருந்திருக்கிறது. உடனே சுதாரித்துக் கொண்டார் மகேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் சத்யா எப்படியோ தலைமறைவாகி விட்டார். அவரை தேடிவந்த போலீசார் தற்போது புதுச்சேரியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். அப்போது செய்தியாளர்கள் அங்கு குவிந்த நிலையில் சத்யா நான் அனைத்தையும் வெளியில் வந்து விலாவாரியாக கூறுகிறேன். என் குடும்பத்தை பற்றி தப்பான செய்திகளை போடாதீர்கள் என கதறியபடி பேசினார்.

தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் 15 ஆண்களை திருமணம் செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மாடு மேய்ப்பவரில் இருந்து போலீஸ் வரை இந்த லிஸ்டில் இருக்கின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட ஆண்களை காதலித்து ஏமாற்றி இருக்கிறார்.

இவர்களிடம் இருந்து பணம் நகையையும் ஆட்டையை போட்டு இருக்கிறார். இது தவிர வேறு ஏதும் ரகசியம் இருக்கிறதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். இந்த வழக்கை பார்க்கும் பொழுது ஜோதிகா நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அதில் இப்படித்தான் ஜோதிகா, திருமணம் ஆன ஆண்களை தன் வலையில் வீழ்த்துவார். அவர்களை பிளாக்மெயில் செய்து பணத்தை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுவார். இந்த கல்யாண ராணியின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. இவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

Trending News