வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நன்றி மறந்த தளபதி.. விஜய்க்காக போராடி காப்பாற்றி விட்ட நடிகருக்கு செய்த துரோகம்

Thalapathy: விஜய்க்கு மட்டும் எங்கிருந்துதான் ஒவ்வொரு பிரச்சனையும் வருகிறது என்று தெரியவில்லை. ‘காக்கிற மரத்திற்கு தானே கல்லடி’ என்பது இவர் விஷயத்தில் உண்மையாகிறது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.

அதுவும் விஜய்யின் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய அவ்வளவு போராட வேண்டியதாக இருக்கிறது. அப்படிதான் விஜய்யின் படம் ரிலீஸ் ஆகுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து அவரை காப்பாற்றி விட்டிருக்கிறார் அரசியல்வாதியாக இருக்கக்கூடிய நடிகர் ஒருவர்.

Also Read: எல்லாம் விஜய்யை அடிபணிய வைக்கத்தான்.. பப்ளிசிட்டிக்காக தில்லுமுல்லு செய்யும் லைக்கா

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கத்தி படம், இலங்கை தொழிலதிபர் சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரித்ததால் அதனை ரிலீஸ் செய்வதற்கு பிரச்சினை செய்தனர். அப்பொழுது காப்பாற்றி விட்டவர் தான் நடிகரும் அரசியல்வாதியும் ஆன சீமான்.

காப்பாற்றிய சீமானுக்கு அப்பொழுது விஜய் உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளார். உதவிக்காக செய்யவில்லை என்று எதுவும் கேட்காமல் விட்டார் சீமான். அதன்பின் பல வருடங்கள் கழித்து திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநாட்டிற்கு பணம் தேவைப்படும் பொழுது விஜய்யை அணுகி உள்ளார் சீமான்.

Also Read: விஜய், லைக்காவிடமிருந்து ஒதுங்கி இருப்பதன் பின்னணி.. பிரச்சனையில் சிக்கிய வரை காப்பாற்றிய அண்ணன்

உங்களுக்கு உதவி செய்வதால் எனக்கு என்ன லாபம் என்று மறுத்திருக்கிறார் விஜய். இதை பல இடங்களில் சீமான் சொல்லிக் காட்டி இருக்கிறார். விஜய்க்காக போராடி காப்பாற்றி விட்ட சீமான், அதன் பின் அவர் உதவி செய்யாததையும் பொதுவெளிகளில் போட்டு உடைத்து விட்டார்.

விஜய் ஒரு துரோகி போலவே காண்பித்த சீமான் தன்னை ஒரு தியாகியாக அரசியல் மேடையில் காட்டிக் கொண்டார். அத்துடன் மூச்சுக்கு 300 தடவை இன்று வரை விஜய் தம்பிக்காக உதவி செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்று சீமான் சொல்லிக் கொள்கிறார்.

Also Read: விஜய் பற்றி பெருமையாக பேசிய அட்லி, கட் செய்ததா சன் டிவி.? நம்பியாராக மாறி வில்லத்தனம் செய்த கமலின் கூட்டாளி

Trending News