கல்கி படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர்.. ஒத்த நொடியில் அனைவரையும் தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்

Prabhas In Kalki 2898: பிரபாஸ் யார் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் என்றால் அது பாகுபலி தான். இப்படிப்பட்ட ஒரு படத்தை தான் இந்திய சினிமா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இப்படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து தற்போது வரை ஒரு வெற்றிக்காக போராடும் அளவிற்கு தள்ளி விட்டது.

அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது கல்கி 2898 ஏ.டி என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் இவருக்கு வில்லனாக உலக நாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், துல்கர், ராணா, திசா பதானி போன்ற ஏகப்பட்ட நடிகர்கள் ஒன்றாக சங்கமித்திருக்கிறார்கள்.

Kalki 2898 AD Trailer – Tamil | Prabhas | Amitabh Bachchan | Kamal Haasan | Deepika | Nag Ashwin

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை வைஜேந்தி மூவிஸ் தயாரித்திருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாதம் 27ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இந்திய சினிமாவையே புரட்டிப் போடும் அளவிற்கு ஒரு சரித்திரத்தை படைக்கப் போகிறது.

அதாவது ஆரம்பத்தில் விஷ்ணுவை காட்டி இந்த உலகின் கடைசி நகரம் காசி என சொல்லும் ஒரு சிறுவனின் குரலோடு தொடங்குகிறது. அத்துடன் அந்த சிறுவன் அமிதாப்பச்சன் இடம் சென்று நீங்கள் வெளியே இருந்தால் பல பேரை காப்பாற்றலாம் என்று கூறுகிறான். ஆனால் அவரோ நான் காப்பாற்ற வேண்டியது ஒருவனை மட்டும் தான் என்கிறார்.

இதற்கு இடையில் தீபிகா வயிற்றில் கையை வைத்து ஒரு உயிர் உருவாகி இருக்கிறது என்று அமிதாப்பச்சனிடம் சொல்கிறார். இதனை தொடர்ந்து தீபிகா வயிற்றில் இருக்கும் குழந்தையால் பேராபத்து வரும் என்பதை தெரிந்து கொண்ட எதிராளிகள் பிரபாஸை அனுப்பி எப்படியாவது தீபிகாவை கூட்டிட்டு வர அனுப்பி வைக்கிறார்கள். அடுத்ததாக பிரபாஸ் புஜ்ஜி காரில் செல்கிறார்.

அடுத்ததாக எதிராளிக்கும் அமிதாப்பிற்கும் இடையே நடக்கும் சண்டைகளை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் மூலமாக எடுக்கப்பட்டு அதை தத்துரூபமாக காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ட்ரெய்லரில் பார்க்கும் பொழுது பிரபாஸின் கதாபாத்திரம் ரொம்பவே சீரியஸாக இல்லாமல் நகைச்சுவை கலந்த பாணியில் இருப்பதாக தெரிகிறது.

அத்துடன் தசாவதாரம் படத்தில் கமல் எப்படி பாட்டி வேடத்தில் வந்திருந்தார். அதேபோல் கடைசியில் கமல் பயப்படாதே அது பிரபஞ்சம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் ட்ரெய்லரை பார்க்கும்பொழுது படம் போர் அடிக்காத வகையில் ஒரு தரமான படமாக இருக்கும்.

Next Story

- Advertisement -