வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளான பிக் பாஸ் போட்டியாளர்.. பழைய போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

Bigg Boss Tamil 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வைல்டு கார்டில் 6 பேர் நுழைந்ததில் இருந்து ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் போன வாரம் அங்கு இருந்த போட்டியாளர்கள் அனைவரும் ராணவை கேலியும் கிண்டலும் பண்ணி டம்மி பீஸ் என்று ஒதுக்கி வந்தார்கள். அத்துடன் விஜய் சேதுபதியும் இவர் எதுக்கும் லாய்க்கு பட மாட்டார் என்பதற்கு ஏற்ப நக்கல் அடித்து பேசினார்.

ஆனால் நேற்று நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் அக்ஷிதாவிற்கும் ராணவிற்கும் சண்டை வந்தது. அதில் அங்கு இருந்த போட்டியாளர்கள் பலரும் அச்சிதாவிற்கு சப்போர்ட் பண்ணி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் ராணவ் அவருடைய கருத்தை சொல்ல முடியாமல் கொஞ்சம் தடுமாறி போனார்.

இருந்தாலும் மற்ற போட்டியாளர்களை விட தான் ஒரு பங்கு முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரிடமும் சேராமல் தனிப்பட்ட முறையில் அவருடைய திறமையை காட்டும் விதமாக விளையாடி வருகிறார். அதிலும் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று நச்சென்று ஒன் லைன் பதிலாக பதிலடி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய ஆட்டமும் புதுசாக இருக்கிறது, பேச்சும் வித்தியாசமாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப தற்போது ராணவிற்க்கு மக்கள் அதிக சப்போர்ட் பண்ணி வருகிறார்கள். அதனால் ஓட்டு கருத்துக்கணிப்பின்படி பழைய போட்டியாளர்களை விட ராணவ் அதிக வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கிறார்.

வந்த ஒரு வாரத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த ராணவ், அடுத்தடுத்து அவருடைய சைலன்டான விளையாட்டு விளையாடி அதிக ஓட்டுகளை வாங்கி விடுவார். தற்போது மஞ்சரி, ரியா, வர்ஷினி, சிவகுமார், சாஞ்சனா, தர்ஷிகா, சத்யாவை விட அதிக ஓட்டு ராணவிற்கு தான் கிடைத்திருக்கிறது. இப்படியே போனால் இவர் முத்துக்குமாரனுக்கு டஃப் கொடுப்பார் போல தெரிகிறது.

Trending News