ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பத்த வச்ச பிக்பாஸ், பற்றி எரியும் வீடு.. வந்த வேலையை சிறப்பா ஆரம்பித்த கவின் கூட்டாளி

Biggboss 7: பிக்பாஸ் ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆயிடுச்சு இன்னும் சம்பவமே நடக்கலையே அப்படின்னு காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போது வெளியான ப்ரோமோ கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. அதாவது ரத்த பூமியான பிக்பாஸ் வீட்டில் தற்போது முதல் சண்டை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அதை தொடங்கி வைத்த பிரதீப் இப்போது ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி வருகிறார். கவின் கூட்டாளியான இவர் வந்த நாள் முதலே ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வந்தார். இதுவே எரிச்சலை கிளப்பிய நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விசித்ரா இவருக்கு சரியான நோஸ்கட் கொடுத்தார்.

Also read: பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இந்த மூணு பேர்ல ஒருத்தர் தான்.. கவின் விட்டதை பிடிக்கும் உயிர் நண்பன்

அதாவது ரூல்ஸை மீறிய விசித்ரா மற்றும் யுகேந்திரனை பிக்பாஸ் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு போகச் சொன்னார். உடனே பிரதீப் முந்திரிக்கொட்டை போல் அங்கிருந்து இரண்டு பேரை இங்கு அனுப்புங்கள் என்று கூறினார். இதை வைத்து கிளம்பிய பிரச்சனை இப்போது கிச்சன் வரைக்கும் வந்துள்ளது.

அதாவது பிரதீப் கேப்டன் விஜய்யிடம் சப்பாத்தி, குருமா மெனு போடும்போது என்னிடம் கேட்கவில்லை என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தார். உடனே கேப்டன் நேத்து நாங்கள் முடிவெடுக்கும் போது நீங்கள் வேலை செய்யாமல் டவலை வைத்து ஆட்டிக் கொண்டிருந்தீர்கள்.

Also read: அவங்க போடுற டிரஸ் எனக்கு புடிக்கல.. மட்டமான காரணத்தை சொல்லி நாமினேட் செய்த விசித்ரா

அப்படிப்பட்டவரிடம் அனுமதி கேட்க முடியாது என்று மூஞ்சில் அடித்தது போல் கூறினார். இதனால் கடுப்பான பிரதீப் எனக்கு சிக்கன் ஃப்ரை வேண்டும் என்று அடுத்த பிரச்சனையை ஆரம்பித்தார். அதற்கு கேப்டன் டீ, ஸ்னாக்ஸ் மட்டும் தான் கேட்கும்போது செய்து தருவோம் என்று அடுத்த ஆப்பை சொருகினார்.

இதனால் உச்சகட்ட கோபமடைந்த பிரதீப் என்னிடம் பில் இருக்கிறது, நான் வாங்கி வந்த பொருட்களை என்னிடம் கொடுத்துவிடு என்று சிறுபிள்ளைத்தனமாக சண்டை போட ஆரம்பித்து விட்டார். இப்படியாக வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பிரதீப் அசீம் இடத்தை பிடிப்பது போல் நடந்து கொள்கிறார் என்ற கமெண்ட்டுகளும் பறந்து கொண்டிருக்கிறது.

Also read: முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும் டம்மி பீஸ்.. நான் எந்த வம்பு தும்புக்கும் போகலயே, எப்புட்றா!

Trending News