வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெரிய மைனாவுக்கு வலை விரித்த பிக்பாஸ் டீம்.. தானாக சிக்கிய சின்ன மைனா

விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அடுத்த சீசனை ஆரம்பிக்க இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி உலகநாயகன் கமல்ஹாசனால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியாளர்களிடம் அவர் காட்டும் அக்கறையும், கண்டிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி கொண்டிருக்கிறது.

Also read : புத்தம் புது போட்டியாளர்களுடன் களமிறங்கும் ஆண்டவர்.. பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங் எப்போது தெரியுமா?

அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக விஜய் டிவி பிரபலமான மைனா நந்தினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நந்தினி.

அதிலும் சரவணன் மீனாட்சியில் மைனா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த பிறகு அந்தப் பெயரே இவருடைய அடையாளமாக மாறி இருக்கிறது. தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நந்தினி கமல் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ரசிகர்கள் எதிர்பார்த்த மைனாவே வேறு.

Also read : பிக்பாஸ் வருவதற்கு 5 கண்டிஷன் போட்ட அமலாபால்.. வரவே வேண்டாம் என கூறிய விஜய் டிவி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது என்ற அறிவிப்பு வந்த உடனே அதில் அமலா பால் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த அமலா பால் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

அதனாலேயே சர்ச்சைநாயகியாக வலம் வரும் அவரை இந்த நிகழ்ச்சியில் வளைத்து போட பிக்பாஸ் குழு முடிவு செய்தது. ஆனால் அவர்கள் விரித்த வலையில் அந்த மைனா சிக்கவில்லை. அதனால் சின்னத்திரை மைனாவான நந்தினியை அவர்கள் களம் இறக்கியுள்ளனர். ரொம்பவும் கலகலப்பான சுபாவம் கொண்ட நந்தினி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read : பிக்பாஸ் நிகழ்ச்சியே பித்தலாட்டம் தான்.. வெளியேறிய நடிகையின் ஆவேச பேச்சு

Trending News