அஸ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். மேலும் இந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். இதன் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஸ்வின் கொஞ்சம் மெத்தனமாக பேசியதால் இப்படம் நன்றாக இருந்தும் தோல்வியை சந்தித்தது. இதனால் அஸ்வின் கடும் சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதன்பிறகு தான் பேசியது தவறு என அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபுசாலமன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படங்களில் இயற்கையும், அழகும் நிறைந்திருக்கும். அவ்வாறு இப்படத்திலும் ஒரு சாலையை கடக்கும் அனுபவங்களை வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் 90 வயதான பாட்டி கதாபாத்திரத்தில் கோவைசரளா நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு செம்பி என பெயர் வைத்துள்ளனர். கோவை சரளா வயதான கதாபாத்திரத்தோடு முதல் போஸ்டரும், மற்றொரு போஸ்டரில் அஸ்வின் ஒரு சிறு குழந்தையுடன் அமர்ந்து இருப்பது போன்ற போஸ்டரும் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை ஆகிய சுற்றுவட்டாரங்களில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பஸ் கண்டக்டராக தம்பி ராமையா நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சாலமனின் மைனா படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் மைனா படத்தில் இடம்பெற்றிருந்த பஸ் விபத்து காட்சியை அற்புதமாக எடுத்திருந்ததால் பலர் இடத்திலிருந்த பாராட்டை பெற்றார். இந்நிலையில் அஸ்வின், பிரபுசாலமன் கூட்டணியில் உருவாகும் இப்படமும் பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொண்டு அஸ்வின் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டால் திரைத்துறையில் அவருக்கான இடத்தை நிச்சயம் பிடிக்க முடியும்.
![sembi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/05/aaaaa.jpg)
![sembi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/05/aaa-2.jpg)