தொலைக்காட்சி

மீனா செஞ்ச காரியத்தால் அரசி மீது விழுந்த பழி.. சக்திவேல் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மருமகள்

By · 08 ஜூன் 2025 · Updated 08 ஜூன் 2025
pandian stores 2 (68)

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்று அரசி தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு சக்திவேல் வீட்டுக்கு மருமகளாக வந்து விட்டார். ஆனால் வந்ததிலிருந்து குமரவேல் தான் டார்ச்சரை கொடுக்கிறார். அதில் அவ்வப்போது அரசி சின்ன பிள்ளைத்தனமா ஏதாவது செய்து குமரவேலுக்கு குடைச்சல் கொடுக்கிறார்.

ஆனால் இதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது அரசி தான். இதை புரிந்து கொள்ளாமல் அரசி பிடிவாதமாக நான் இங்கேதான் இருப்பேன், குமரவேலுவே பழிவாங்குவேன் என்று வீர வசனமாக பேசுகிறார். ஆனால் இதில் ஒரு பிரயோஜனமும் இல்லை, தேவையில்லாமல் வாழ்க்கை வீணாகுது தான் மிச்சம். இதனைத் தொடர்ந்து சக்திவேல், வீட்டிற்கு லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துட்டு வந்து வைக்கிறார்.

இந்த பணத்தை பார்த்து சுகன்யா வாய் பிளந்து பேராசைப்படுகிறார். உடனே பழனிவேலுமிடம் உங்க அண்ணனிடம் நிறைய பணம் இருக்கிறது, அதில் உங்களுக்கும் உரிமை இருக்கிறதான கேட்டு வாங்குங்கள் என்று சொல்கிறார். இப்படி சுகன்யா பேசிக் கொண்டிருப்பதை மீனா கேட்டு விடுகிறார். உடனே மீனா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக சக்திவேல் குடும்பத்திற்கு ஆப்பு வைத்து விடுகிறார்.

அந்த வகையில் இன்கம் டேக்ஸ் ஆபிஸ்க்கு போன் பண்ணி சக்திவேல் வீட்டில் பணம் லட்சக்கணக்கில் இருக்கிறது. ஆனால் அது எதுவும் கணக்கில் இருப்பது போல் தெரியவில்லை. அதனால் நீங்கள் உடனடியாக வீட்டிற்கு போயிட்டு விசாரிக்கலாம் என சொல்கிறார். அதன்படி சக்திவேல் வீட்டிற்கு இன்கம்டேக்ஸ் ஆபிசர் சென்று அந்த பணத்துக்கு எல்லாம் கணக்கு கேட்கிறார்கள்.

ஆனால் கணக்கு எதுவும் சரியாக இல்லாததால் மொத்த பணத்தையும் எடுத்துட்டு போய் விட்டார். ஆனால் இந்த கோபத்தை சக்திவேல் எப்படி காட்டுவது என்று தெரியாமல், அரசியை பார்த்து பாண்டியன் வீட்டு மகள் எப்பொழுது இங்கு காலடி எடுத்து வைத்தாலோ, அப்பொழுதே எல்லா தரித்திரமும் இங்கு வந்து விட்டது என்று அரசி மனசு நோகும்படி பேசி விட்டார்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் மீனாதான், இது தெரிந்து கொள்ளாத சக்திவேல் மொத்த பழியையும் அரிசி மீது தூக்கி போட்டு விட்டார். ஏற்கனவே சக்திவேல் கடைக்கு சரியான பட்டா எதுவும் இல்லாமல் மீனா அதிரடியாக அந்த கடை எல்லாம் இடித்து விட்டார். தற்பொழுது பணத்துக்கும் மீனா ஆப்பு வைத்து விட்டார். தொடர்ந்து சக்திவேல் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு மீனா அதிரடியாக சம்பவத்தை செய்து வருகிறார்.