Rajini and Blue Sattai Maran: சினிமா விமர்சகர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பல பிரபலங்களையும் தாறுமாறாக சமூக வலைதளத்தின் மூலம் கலாய்த்து வருவதே ப்ளூ சட்டை மாறனின் முக்கிய வேலையாக இருக்கும். முக்கியமாக ரஜினியை பற்றி பேச வேண்டும் என்றால் முதல் ஆளாக இவர் தான் வந்து அவரை சீண்டிப் பார்ப்பார்.
சமீபத்தில் காவலா பாடத்தில் தமன்னாவுடன் தாத்தா டான்ஸ் ஆடுவது போல் இருக்கிறது என்று நக்கல் அடித்தார். இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தில் வெளிவந்த இரண்டாவது பாடலின் வரிகளை வைத்து வடிவேலுவின் காமெடியை ஒப்பிட்டு இவருடைய பதிவை கலாய்த்து போட்டிருந்தார்.
Also read: அட்லீயை மிஞ்சிய மடோன் அஸ்வின்.. லிஸ்ட் போட்டு புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
அந்த வகையில் மறுபடியும் வம்பு இழுக்கும் விதமாக தற்போது இவருடைய ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்களை ரஜினியை வைத்து கிண்டல் அடித்து போட்டு இருக்கிறார். அதாவது கட்சி ஆரம்பிக்காமல் இருக்க என்ன காரணம் சொன்னாரு? அடிக்கடி வெளியே நடந்த உடம்பு ஒத்துக்காது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார் என்பதை காரணமாக கூறி இருந்தார்.
இதை வடிவேல் சத்யராஜ் பாணியில் பேசுவது போல் அவர்களுடைய புகைப்படத்தை போட்டிருக்கிறார். அத்துடன் அப்புறம் எப்படி வரிசையா படங்களை கமிட் பண்ற? ஏன் அவுட்டர் போற? என்ற கேள்வியை முன் வைத்து ஒருமையில் பேசி இருக்கிறார். அதாவது பணம் சம்பாதிக்கணும்னா என்ன வேணாலும் பண்ணலாம் அதற்கு உடம்பு ஒத்துழைக்கும்.
Also read: மாவீரன் இந்த படத்தின் காப்பியா.? தேவையில்லாமல் உளறி வாங்கி கட்டிக் கொண்ட ப்ளூ சட்டை
ஆனால் அரசியல் வருவேன் என்று கூறி ரசிகர்களை ஏமாற்றிவிட்டு கடைசியில் பொய் சாக்கு சொல்லி ஏமாற்றியது போல் இவருடைய கருத்தை போட்டு இருக்கிறார். இவர் தொடர்ந்து ரஜினியை சீண்டி பார்ப்பதே இவருடைய வேலையா போச்சு. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றி விளாசி வருகிறார்கள்.
ஆனாலும் எதற்கும் அசராமல் தொடர்ந்து ரஜினியை வைத்து டார்கெட் செய்து வருகிறார். இவர் ரஜினியை கிண்டலடித்து பதிவு போடுவது மட்டுமல்லாமல் இவருடைய இமேஜையே பங்கம் செய்ற அளவுக்கு பதிவு இருப்பதால், ரஜினி ரசிகர்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மிக கோபத்தில் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

Also read: ப்ளூ சட்டை மாறனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜி பி முத்து.. மொத்தமாக அசிங்கப்பட்ட நிலை