வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

காவேரி விஜய்க்கு இடையே உருவான பந்தம்.. ராகினி போட்ட பிளான், வெண்ணிலா வந்தாலும் இனி நோ டென்ஷன்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி எதிர்பார்க்காத படி காவிரியின் பிறந்தநாளுக்கு விஜய் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து சந்தோஷப்படுத்தி விட்டார். அத்துடன் காவிரி குடும்பத்தையும் ஒன்றாக கூட்டிட்டு வந்து அவர்களுக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸாக ஒரு வீடை கொடுத்துவிட்டார்.

ஆனால் இதில் கலந்துகொண்ட யமுனா மற்றும் கங்காவுக்கு மட்டும் காவேரி ஓவராக போய்க் கொண்டிருக்கிறார். காவேரி விஜயும் சேர்ந்து செய்யும் அலப்பறையில் நாம் தான் டம்மி ஆகி நிற்கிறோம் என்று புலம்பிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் காவேரியின் சந்தோஷத்தில் பொறாமை இருப்பது போல் தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் காவிரி எதார்த்தமாக யமுனாவிடம் பேச போனாலும் யமுனா, காவிரி மனதை நோகடிக்கும் விதமாக நவீன வைத்து காயப்படுத்தி பேசி விட்டார். அடுத்ததாக நவீன், காவிரி வீட்டுக்கு யமுனாவை கூப்பிடுவதற்கு வருகிறார். ஆனால் நவீன் மற்றும் காவிரி சந்தித்து விடக்கூடாது என்பதற்காக யமுனா அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு ராகினிக்கு அவங்க அப்பா போன் பண்ணி வெண்ணிலா இருக்கும் இடம் தெரிந்து விட்டது வா போய் பார்க்கலாம் என்று கூப்பிடுகிறார். உடனே ராகினி வீட்டில் இருந்து கிளம்புகிறார். அப்பொழுது தாத்தா எங்கே போகிறாய் இந்த நேரத்தில் என்று கேட்கும் பொழுது அப்பா எனக்காக ஸ்பெஷலா சாப்பாடு தயார் பண்ணி வைத்திருக்கிறார். அதனால் சாப்பிட்டு வருகிறேன் என்று பொய் சொல்லி கிளம்பி விடுகிறார்.

பிறகு ராகினி, வெண்ணிலா இருக்கும் ஆசிரமத்திற்கு போய் விடுகிறார். பசுபதி மற்றும் அஜய் அனைவரும் இருக்கும் பொழுது வெண்ணிலாவை பார்த்த சந்தோஷத்தில் ராகினி, வெண்ணிலாவிடம் பேசுகிறார். ஆனால் வெண்ணிலா எதுவும் பேச மனநிலமையில் இல்லாததால் எப்படி இவரை இங்கிருந்து கூட்டிட்டு போக முடியும் என்ற குழப்பத்தில் வேற ஒரு பிளான் ராகினி போட்டுவிட்டார்.

ராகினி இனி என்ன பிளான் போட்டாலும் வெண்ணிலாவே நேரடியாக வந்தாலும் விஜய் மற்றும் காவிரிக்கு இடையில் எந்தவித பிரச்சனையும் வராது என்பதற்கு ஏற்ப ஒப்பந்தத்தின் படி கல்யாணம் நடந்திருக்கிறது என்பதை மறந்து இவர்களுக்குள் பந்தம் ஏற்பட்டு விட்டது. அந்த வகையில் இனி காவிரியை விஜய் கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து சந்தோஷத்தை கொடுக்கப் போகிறார்.

Trending News