திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்.. துணிவை தட்டி தூக்க தளபதி எடுத்த பிரம்மாஸ்திரம்

விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் போட்டி போட்டுக் கொண்டு வெளியானது. கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படம் மோதிக்கொள்ள இருக்கிறது. இதனால் இந்த இரு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டியில் நிலவி வருகிறது.

தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தை லலித் குமார் வெளியிடுகிறார். அதேபோல் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. தற்போது தமிழ்நாட்டில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதி தான் வெளியிட்டு வருவதால் துணிவு படத்திற்கு அதிகப்படியான திரையரங்குகள் கிடைத்துள்ளது.

Also Read : 250 கோடி, 300 கோடி கதையெல்லாம் சும்மாவா.. உள்ளூரில் வியாபாரம் ஆகாத தளபதியின் வாரிசு

வாரிசை விட கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான திரையரங்குகளில் துணிவு படம் வெளியாக உள்ளது. இதனால் தற்போது விஜய்க்கு அஜித் மீது பயம் வந்துள்ளதால் ஒரு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது பண்ணையார் இல்லத்தில் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த பொங்கலுக்கு நம்ம தான் ஜெயிக்கணும் என நிர்வாகிகளுடன் பேசி உள்ளார்.

துணிவு படத்தின் மீதுள்ள பயத்தின் காரணமாக வாரிசு படத்தை எப்படி புரமோஷன் செய்கிறோம் என்று நிர்வாகிகளிடம் விஜய் பேசி உள்ளார். இது அஜித்தின் மீதுள்ள பயத்தை காட்டுகிறது என தயாரிப்பாளர் கே ராஜன் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.

Also Read : பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

விஜய் தனது நிர்வாகிகளுடன் அடிக்கடி பேசி வந்தாலும் இந்த மாதிரி கூட்டங்கள் முதல்முறையாக படம் வெளியாவதற்கு முன் கூட்டுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் முதல் நாள் துணிவு படத்தை விட அதிக கலெக்ஷனை அல்ல முடியுமா என்று விஜய்க்கு சந்தேகம் எழுந்துள்ளது.

வாரிசு படத்திற்கான ப்ரோமோஷனை படுஜோராக செய்ய வேண்டும் என்று விஜய் திட்டம் திட்டி உள்ளார். இதற்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டதாம். எப்படியும் துணிவு படத்தை விட ஒரு ரூபாயாவது அதிக கலெக்ஷனை எடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் தளபதி செயல்பட்டு வருகிறார்.

vijay-makkal-iyakkam

Also Read : ஓவரா ஆட்டம் காட்டும் வாரிசு படக்குழு.. ரசிகர்கள் என்ன முட்டாளா? பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

Trending News