வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. டாப் ஹீரோக்களால் பழைய கதையை உருட்டும் சுந்தர் சி

Director Sundar C: மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பிரம்மாண்டத்தின் படைப்பாய் உருவாகி வெற்றி கண்ட படம் தான் பொன்னியின் செல்வன். வரலாற்று காவியங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை மேற்கொண்டு, தன் இயக்கத்தில் படம் எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர் சுந்தர்.சி -யின் நிலைமையை பற்றி இங்கு காண்போம்.

சமீபத்தில் வரலாற்று காவியமாக வெளிவந்து வெற்றி கண்டு, மாபெரும் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இது போன்ற படம் எடுக்க ஆசைப்பட்டு அதன்பின் சங்கமித்ரா என்னும் படத்தை தொடங்கினார் சுந்தர.சி. இப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

Also Read: 2000 டான்சர்களோடு மரண குத்து போட்ட தளபதி.. லியோவின் ‘நா ரெடி’ பாடல் வீடியோ

மேலும் இப்படத்தை மேற்கொள்ள பிரபலங்களை அழைத்திருக்கிறார் சுந்தர்.சி. அதை தொடர்ந்து இப்படம் ஒரு சரித்திர காலப் படம் என்பதால் விஷால் மற்றும் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து ஜகா வாங்கி உள்ளார்கள். ஆனாலும் சுந்தர.சி இது சரித்திர காலம் படம் அல்ல இது வேறு மாதிரி ஒரு படம் என கூறியும் இவரின் பேச்சை கேட்காமல் நடிக்க மறுத்துள்ளார்கள்.

மேலும் அடுத்தடுத்த படங்கள் வரலாற்று படங்களாக இருந்தால் அவற்றிற்கு எதிர்பார்ப்பு குறையும் என்பதை தெரிந்து கொண்டு நேக்காக ஜகா வாங்கி இருக்கிறார்கள் விஷால் மற்றும் ஜெயம் ரவி. இருப்பினும் ஆர்யா மட்டும் இவ்விடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறாராம்.

Also Read: கோபியை உசுப்பேத்தி ரணகளப்படுத்தும் ராதிகா.. பாவம் வலிக்காத மாதிரி எவ்வளவு தான் தாங்குவார்

இது போன்ற காரணத்தால் பெரும் மனவேதனைக்கு ஆளாகி, சும்மா ஆள விடுங்கடா சாமி என்று தன் படமான அரண்மனை பாகம் 4 தொடங்கியுள்ளார். பிரபலங்களை நம்பி இருந்து, இப்படத்தை ட்ராப் அவுட் செய்துவிட்டு தற்பொழுது தன் பழைய கதையை உருட்டி வருகிறார் சுந்தர்.சி.

இவரின் கனவு படமான சங்கமித்ரா தற்பொழுது ஒதுக்கி வைக்கப்பட்டு அரண்மனை படத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அவ்வாறு தற்போதைக்கு கிடப்பையில் போடப்பட்ட இப்படம் மேற்கொண்டு பிரபலங்களின் வருகையால் வெளி வருமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: நிஜ அப்பா, மகன் கூட்டணியில் வெளியான 6 படங்கள்.. பொன்னியின் செல்வனில் கலக்கிய ரத்த சொந்தம்

Trending News