திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரிலீசுக்கு முன்பே கொடி கட்டி பறக்கும் பிசினஸ்.. எதிர்பார்ப்பைக் கிளப்பிய சூர்யா சிறுத்தை சிவா கூட்டணி

சூர்யா இப்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமாக 3டி முறையில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கான டிஜிட்டல் உரிமையை வாங்குவதில் இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறதாம். அந்த வகையில் அமேசான், ஹாட் ஸ்டார், நெட் பிலிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கிடையில் உச்சகட்ட போட்டி நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு கோடி கொடுத்தாவது இந்த படத்தை வாங்கி விட வேண்டும் என்று முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் திட்டமிட்டு கொண்டிருக்கிறது.

Also read:அடுத்த தேசிய விருதை வாங்க ரெடியாக இருக்கும் சூர்யா.. அடுத்தப் படத்தை அறிவித்த கெத்தான இயக்குனர்

அந்த வகையில் படத்திற்கான மொத்த பட்ஜெட் பணமும் இந்த டிஜிட்டல் உரிமையின் மூலமே கிடைத்துவிடும் அளவுக்கு பணத்தை கொடுக்க ஓடிடி நிறுவனங்கள் தயாராக இருக்கிறதாம். இதுவரை சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே இந்த அளவுக்கு ஒரு வியாபாரம் நடந்ததே கிடையாது என்னும் அளவுக்கு சூர்யா 42 திரைப்படத்தின் டிஜிட்டல் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருக்கிறது.

இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம். முடிந்த அளவுக்கு டிஜிட்டல் உரிமையிலேயே அதிக காசு பார்த்து விடவும் பல கோடிக்கு வியாபாரம் செய்யவும் தற்போது பட குழு திட்டமிட்டு வருகிறது. எப்படி இருந்தாலும் இந்த படத்திற்கான உரிமையை வாங்கி விடுவதில் அமேசான் நிறுவனம் தான் அதிக ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறதாம்.

Also read:சூர்யாவை மட்டும் தூக்கிவிடும் பிரபலம்.. ஃபிலிம் ஃபேர் அவார்டில் நடந்த பாலிடிக்ஸ்

சமீபகாலமாக பொன்னியின் செல்வன், நானே வருவேன் உட்பட பல திரைப்படங்களை வாங்கி ஒளிபரப்பி வரும் இந்த நிறுவனம் மெகா பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் சூர்யா படத்தை கைப்பற்ற பல கோடிகளை வாரி இறைக்க முன்வந்துள்ளது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல் பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்குமாம். மேலும் இப்படத்தின் மூலம் சூர்யாவின் மார்க்கெட்டும் உலக அளவில் உயரும் என்றும் பட குழு தெரிவித்துள்ளனர்.

Also read:சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்.. தேசிய விருதை பெற்று தந்த சூரரைப் போற்று

Trending News