புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

ரோகிணிக்கு ஆப்பு வைக்க ஷோரூம் போகும் கசாப்பு கடை மாமா.. முத்து கண்ணில் மண்ணை தூவிய மணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு தேவையான உணவை சமைத்து மீனா, பார்வதி வீட்டிற்கு எடுத்துட்டு வருகிறார். அங்கே சிந்தாமணியை பார்த்து அதிர்ச்சியான மீனா என் மாமியாரை கைக்குள் போட்டு என்னுடைய வேலையை கெடுப்பதற்கு தான் சகுனி வேலையை பார்க்க வந்திருக்கிறாயா என்று மீனா புரிந்து கொண்டார். ஆனால் சிந்தாமணியின் நோக்கம் தெரியாமல் விஜயாவும் சிந்தாமணியை தான் நம்புகிறார்.

அதுமட்டுமில்லாமல் அனைவரும் முன்னாடியும் வழக்கம் போல் மீனாவை அவமானப்படுத்தி மரியாதை இல்லாமல் விஜயா பேசுகிறார். ஆனால் மீனா, சிந்தாமணிக்கு மாமியாருக்கும் கொடுக்க வேண்டிய பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார். இதுதான் சான்ஸ் என்று சிந்தாமணி, விஜயாவிடம் உங்க மருமகள் நீங்கள் சொல்வதைக் கேட்காமல் உங்களை எதிர்த்து எதிர்த்து பேசுகிறாள். இப்படியே போனால் உங்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்று வற்றி வைக்கிறார்.

இதையெல்லாம் பார்த்த பார்வதி உங்க ரெண்டு பேருடைய கொட்டத்தையும் இந்த மீனாதான் அடக்கப் போகிறார் என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொள்கிறார். அடுத்ததாக மீனா அனைவருக்கும் சமைத்து சாப்பாடு பரிமாறும் பொழுது விஜயா மற்றும் மனோஜ்க்கு தேவையான தனி சாப்பாட்டையும் சமைத்து இருக்கிறார். அப்பொழுது மனோஜ்க்கு தேவையான சாப்பாடு அடுப்பங்கரையில் இருக்கு ரோகிணி எடுத்துட்டு வந்து கொடுங்க என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா நீ எடுத்துட்டு வர முடியாதா என்று கேட்கிறார். என்னால சமைக்க தான் முடியும் பரிமாறுவது அவங்க மனைவி பண்ணட்டும் என்று பதில் கூறுகிறார். உடனே விஜயா, நான் சொல்வதை செய்ய முடியலைன்னா நீ ஏன் இந்த வீட்டில் இருக்க வேண்டும். இப்பமே உன்னுடைய புருஷனை கூட்டிட்டு தனியாக போ என்று சொல்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி இந்த மனோஜும் விஜயாவிடம் வீட்டை விட்டு வெளியே போக சொல்லுமா என்று சொல்கிறார்.

இதை எல்லாம் கேட்ட முத்து, அம்மா என்ன சொன்னாலும் அது வழக்கம்போல் பேச்சாக இருக்கும். ஆனால் நீ இதில் தலையிட்டு எதுவும் சொல்லத் தேவையில்லை என்று சொல்கிறார். ஆனாலும் இவ்வளவு அசிங்கமும் அவமானமும் பட்ட பிறகும் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் மீனா முத்து அங்கே இருப்பது வேலைக்காரியை விட மோசமாகத்தான் இருக்கிறது.

அடுத்ததாக சுருதி ரவி இருவரும் பீட்சா வாங்கிட்டு வருகிறார்கள். ஆனால் விஜயா மனோஜ் சாப்பிடக்கூடாது என்பதால் மற்றவர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்கள். ஆனாலும் இவர்களுக்கும் சாப்பிட ஆசை இருக்கிறது, இருந்தாலும் டயடிஷன் சொன்னபடி சாப்பாட்டு கண்ட்ரோல் வேணும் என வாயடைத்து விட்டார்கள். இதனை அடுத்து தூங்கிக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் வயிறு சரியில்லாமல் அவஸ்தை படுகிறார்கள்.

அடுத்து அண்ணாமலையை முத்து, மனோஜின் ஷோரூமுக்கு கூட்டிட்டு போகிறார். அங்கே கொஞ்சம் கணக்கு சம்பந்தமான விஷயங்களை பார்க்க சொல்கிறார். அந்த சமயத்தில் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை மணியும் தலையில் ஹெல்மெட் போட்டு வருகிறார். பிறகு ரோகிணியை பார்த்து மணி பேசுகிறார். ரோகிணி, நீங்க ஏன் இங்க வந்தீங்க என்று கேட்கிறார். அதற்கு அவர் என்னுடைய அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் அதனால் ஏசி பிரிட்ஜ் வாங்க வந்தேன் என்று சொல்கிறார்.

ஆனால் அதற்கு காசு கொடுக்காமல் ரோகினையின் மாமாவாக நடித்ததற்கு இலவசமாக பொருட்களை வாங்கி ரோகினிக்கு ஆப்பு வைக்கப் போகிறார். முத்து அங்கு இருந்தாலும் முத்து கண்ணில் மண்ணைத் தூவி மணி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுவார். இருந்தாலும் ஓசியில் வாங்கிட்டு போன பொருளுக்கு அண்ணாமலை ரோகினி இடம் கணக்கு கேட்கப் போகிறார்.

Trending News