Actor Vijay: விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனர்களின் கனவாக இருக்கிறது. தற்போது பல இயக்குனர்களும் இந்த இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் இவரால் படுதோல்வியை சந்தித்த இயக்குனர்களும் இருக்கிறார்கள். அப்படி விஜய்யால் சோலி முடிந்த ஆறு இயக்குனர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.
பாபுசிவன்: இவருடைய இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இத்தனைக்கும் அப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனாலும் அந்த படத்திற்கு பிறகு பாபு சிவன் எந்த படத்தையும் இயக்கவில்லை.
Also read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல
எஸ் பி ராஜ்குமார்: என் புருஷன் குழந்தை மாதிரி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கும் இவர் விஜய்யை வைத்து சுறா படத்தை இயக்கியிருந்தார். ஓவர் ஹீரோயிசம் காரணமாக அப்படம் வசூலில் மரண அடி வாங்கியது. மேலும் படத்தை பார்த்த பலரும் அதை கலாய்த்து தள்ளினார்கள். இதைத்தொடர்ந்து இயக்குனர் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அதெல்லாம் வந்த சுவடு தெரியாமல் போனது.
நேசன்: இவர் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தை இயக்கியிருந்தார். அப்படம் நஷ்டத்தை சந்திக்காமல் தல தப்பி இருந்தாலும் இயக்குனருக்கு அதன் பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இயக்குனர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
பரதன்: விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பைரவா படத்தை இவர் இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த இப்படம் 100 கோடி அளவில் வசூலித்திருந்த போதிலும் இயக்குனர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அந்த வகையில் விஜய் கொடுத்த வாய்ப்பு இவருக்கு பிரயோஜனம் இல்லாமல் போயிருக்கிறது.
Also read: ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த அருண் விஜய்.. சூர்யாவின் முடிவால் அடித்த ஜாக்பாட்
சிம்பு தேவன்: வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்னும் வெற்றி படத்தை கொடுத்த இவர் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை இயக்கியிருந்தார். ஃபேண்டஸி ஆக்சன் அட்வெஞ்சர் படமாக வெளிவந்திருந்த போதிலும் அப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இவர் கசட தபற, விக்டிம் போன்ற ஆந்தாலஜி படங்களை எடுத்திருந்தார். அந்த வகையில் புலி படம் இவருக்கு மரண அடியை கொடுத்து ஓரங்கட்டியது.
வம்சி: அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை இவர் இயக்கியிருந்தார். ஏற்கனவே தமிழில் தோழா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் வாரிசு படத்தில் அதை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்டார். அந்த வகையில் கலவையான விமர்சனங்களை பெற்ற வாரிசு படத்திற்கு பிறகு இவர் எந்த படத்தையும் கமிட் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டாராம்.
இவ்வாறாக இந்த ஆறு இயக்குனர்களும் விஜய் படத்தை இயக்கிய கையோடு காணாமல் போயிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்யால் இவர்களின் கேரியர் சோலி முடிந்துவிட்டது.
Also read: டாப் 5 லிஸ்ட்ல இருக்கும் ஹீரோக்கள்.. மூன்றாவது இடத்தில் சிவகார்த்திகேயனா.? புதுசா உருட்டாதீங்க