வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அப்பாவை அப்படியே ஃபாலோ பண்ணும் வாரிசு.. அரசியலுக்கு முன்னாடி சினிமா தானாம்

Gossip: வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் சினிமாவில் இப்போது அதிகமாகிவிட்டது. ஏற்கனவே அந்த எவர்கிரீன் நடிகரின் மகன் பல வருடங்களுக்கு முன்பே ஹீரோவாகிவிட்டார்.

தற்போது அவருடைய அடுத்த வாரிசும் ஹீரோவாக கால் பதித்திருக்கிறார். அதேபோல் மாஸ் ஹீரோவின் மகனும் படம் எடுக்கிறேன் என கிளம்பி விட்டார்.

இந்த சூழலில் அந்த அரசியல் பிரபலத்தின் வாரிசும் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவர் தன் அம்மாவின் பட விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவரை மீடியா கேமராக்கள் சுற்றி வளைத்து படம்பிடித்தது. அதேபோல் அவருக்கு அங்க பலத்த வரவேற்பும் கிடைத்தது.

அரசியலுக்கு முன்னாடி சினிமா தானாம்

அதுமட்டுமின்றி சில பிரபலங்கள் இவரை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டார்களாம். எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர்.

அதேபோல் ஒல்லி நடிகரின் வாரிசையும் ஹீரோவாக்க அவர் முயற்சி செய்து வருகிறார். இப்படியாக அடுத்தடுத்து வாரிசுகள் களமிறங்க தொடங்கி இருக்கின்றனர்.

Trending News