திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யாவை மட்டும் தூக்கிவிடும் பிரபலம்.. ஃபிலிம் ஃபேர் அவார்டில் நடந்த பாலிடிக்ஸ்

முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் சூர்யா தற்போது உலக அளவில் பிரபலமாக மாறிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் சமூக சேவை என அவர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடித்த சூரரைப் போற்று திரைப்படம் தற்போது பல விருதுகளை வாங்கிக் கொண்டிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரை போற்று. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சமீபத்தில் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தது.

Also read : சூர்யாவின் அதிரடியால் நிலைகுலைந்து போன பாலா.. ரிலீஸுக்கு முன்பே கலெக்ஷனை அள்ளும் வணங்கான்

அதைத்தொடர்ந்து நடந்த ஃபிலிம் ஃபேர் அவார்ட் நிகழ்ச்சியில் இந்த படம் பல விருதுகளை தட்டி சென்றது. இதனால் சூர்யாவுக்கு திரையுலகில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை சூர்யாவின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் வாங்கிய விருதுகள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இப்படம் தேசிய விருது பெற்றபோது அதற்கு பின்னணியில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஏனென்றால் தேசிய விருது வழங்கும் குழுவில் அவரும் ஒரு மெம்பர் என்ற காரணமே இந்த சர்ச்சைக்கு போதுமானதாக இருந்தது. அதனால் தான் அவர் சூர்யாவுக்கு இந்த விருது கிடைக்க உதவியதாகவும் கூறப்பட்டது. இந்த விஷயம் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது ஃபிலிம் ஃபேர் விருது பற்றியும் சில செய்திகள் கசிந்துள்ளது.

Also read : விக்ரம், சூர்யாவுக்கு போட்டியாக கெட்டப் மாற்றும் கில்லாடி நடிகர்.. ஓவர் ரிஸ்க் எடுத்ததால் கதறி அழுத அம்மா

கடந்த வருடம் வெளியான திரைப்படங்களுக்கு தான் தற்போது விருத்துகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜெய் பீம் படத்திருக்கும் விருது கிடைத்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று படத்திற்கும் விருது கிடைத்தது பலருக்கும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. ஏனென்றால் தங்கதுரை ஃபிலிம் ஃபேர் அவார்ட் குழுவிலும் இருந்திருக்கிறார். தற்போது அவர் அதில் இல்லாவிட்டாலும் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சூரரைப் போற்று படத்திற்கு விருது கிடைக்க செய்துள்ளார். இவ்வாறு அவர் சூர்யாவின் வளர்ச்சிக்கு பின்னணியில் ஒரு வலது கையாக செயல்பட்டு வருவதாகவும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Also read : 2022-ம் ஆண்டிற்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள்.. தொடர்ந்து வெற்றிக் கொடியை பறக்கவிடும் சூர்யா

Trending News