வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அர்ஜுன் பொண்ணு தான் மருமகள்.. தம்பி ராமைய்யாவுக்கு முன்பாகவே சஸ்பென்சை உடைத்த பிரபலம்

Actor Arjun: அர்ஜுன் இப்போது படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தலைவர் 170-ல் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகவும் நடிக்க இருக்கிறார். இந்த சூழலில் இவருடைய மகள் பற்றிய செய்தியும் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

அதாவது நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. இதை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Also read: கே டி குஞ்சுமோன் அறிமுகப்படுத்தி புகழை சம்பாதித்த 5 பிரபலங்கள்.. 175 நாட்கள் ஓடி கலெக்ஷன் பார்த்த அர்ஜுன்

இருப்பினும் தம்பி ராமையா சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த காதலை உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் திருமணம் பற்றி எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. இந்த சூழலில் நடிகர் செந்தில் ஒரு பேட்டியின் போது ஐஸ்வர்யா, உமாபதியின் திருமண விஷயத்தை பற்றி வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, தம்பி ராமையாவின் மகன் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்தவராக இருக்கிறார். அவருக்கு கூட இப்போது கல்யாணம் நடக்க இருக்கிறது என்று கூறிய அவர் பொண்ணு யார் என்பது மட்டும் சஸ்பென்ஸ் என தெரிவித்திருந்தார்.

Also read: வெறும் வன்முறையை வைத்து ஜெயித்த 5 படங்கள்.. உச்சகட்ட வெறியில் அர்ஜுன் நடிக்கும் படம்

ஏனென்றால் அந்த பேட்டியின் போது தம்பி ராமையாவும் அருகில் இருந்தார். அதனால் அவரே சொல்லட்டும் என்று செந்தில் அமைதியாக இருந்தார். ஆனாலும் சில வற்புறுத்தலின் காரணமாக அர்ஜுனின் மகள் தான் தம்பி ராமையா வீட்டு மருமகள் என்ற சஸ்பென்சை அவர் மேடையில் உடைத்தார்.

மேலும் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு தம்பி ராமையாவும் சிரித்தபடி தலையாட்டினார். அந்த வகையில் விரைவில் அர்ஜுன் வீட்டில் கல்யாண களைகட்ட இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. அந்த அறிவிப்பை தான் தற்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: ஆண்டவரை நம்பி மோசம் போன 5 நடிகர்கள்.. அர்ஜுன் மார்க்கெட் போக காரணமாக இருந்த படம்

Trending News