திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏ ஆர் ரகுமான் தங்கச்சியை காதலித்து கழட்டி விட்ட பிரபலம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்

சமீபகாலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன். ஆரம்பத்தில் சினிமாவில் நடிகராக இருந்ததை காட்டிலும் இப்போதுதான் அவருக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பற்றி பேசி விமர்சித்து வருகிறார்.

இதனால் இவரது யூடியூப் சேனலை பலரும் பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி போதாக்குறைக்கு பல நடிகைகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கொட்டுகிறார். சமீபத்தில் இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் பயில்வனை ரோட்டில் வைத்து நார் அடித்திருந்தார்.

Also Read :கழட்டி விடப்படும் ஏஆர் ரகுமான்.. ஆஸ்கர் நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்நிலையில் தற்போது இசைப்புயல் ஏஆர் ரகுமானின் தங்கையை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு கைவிட்டு விட்டார் என்ற செய்தியை பயில்வான் கூறியுள்ளார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் தற்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் இசையமைத்து தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறி உள்ளார். மேலும் மிகப் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்திற்காக ரகுமான் இசையமைத்துள்ளார்.

Also Read :ஏஆர் ரகுமானை அடிபணிய வைக்கத் துடிக்கும் சினிமா.. இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை

இந்நிலையில் ஏஆர் ரகுமானின் தங்கச்சியை சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி காதலித்து திருமணம் செய்து கொண்டு பாதியிலேயே கழட்டி விட்டு விட்டதாக பயில்வான் கூறி உள்ளார். அதாவது சில நாட்கள் பயில்வான் ரங்கநாதனை பிஸ்மி விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயில்வான் இவ்வாறு கூறியுள்ளார்.

பலரைப் பற்றி அவதூறாக பேசுகிறேன் என்று சொல்லும் நீங்கள் செய்த காரியத்தை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று பிஸ்மியை பயில்வான் எச்சரித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படிப்பட்ட ஒருவர் என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என பயில்வான் கூறியுள்ளார்.

Also Read :சக்சஸ் கொடுக்காமலேயே பல கோடி சொத்து மதிப்பு.. மாதவனின் ரகசியத்தை வெளியிட்ட பயில்வான்

Trending News