திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இளையராஜாவை மட்டுமே நம்பி 19 படத்தை இயக்கிய பிரபலம்.. பிசிறு தட்டாமல் இசைஞானி செய்த காரியம்

இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காத உயிரினமே இல்லை என்று சொல்லலாம். அப்படி தனது இசையால் மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். அந்த காலத்தில் இளையராஜா போடாத மெட்டுக்களே இல்லை. பட்டி தொட்டி எங்கும் அவரது பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

மேலும் அந்த காலகட்டத்தில் ஹீரோக்களின் கால்ஷீட் கூட எளிதில் கிடைத்துவிடுமாம். ஆனால் இளையராஜா கால்ஷீட் கிடைக்கவே கிடைக்காதாம். அந்த அளவுக்கு 80, 90களில் படு பிஸியாக இளையராஜா திகழ்ந்து வந்தார். இந்நிலையில் இளையராஜாவை நம்பியே ஒரு இயக்குனர் தன்னுடைய படங்களை எடுத்து வந்தார்.

Also Read : மேடையிலேயே பிரபல இயக்குனரை அவமதித்த இளையராஜா.. ஆணவத்தின் உச்சிக்கு சென்ற சம்பவம்

அதாவது இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ளார். அதில் 17 படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். மீதமுள்ள இரண்டு படங்களுக்கு கங்கை அமரனே இசையமைத்துள்ளார். மேலும் கங்கை அமரனின் படங்களில் பெரிதும் பேசப்படுவது பாடல்கள் தான்.

அதிலும் கரகாட்டக்காரன் படம் இளையராஜாவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இதில் எங்க வீட்டு பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, செண்பகமே செண்பகமே, வில்லுப்பாட்டுக்காரன் போன்ற பல படங்கள் அடங்கும். இவ்வாறு தனது அண்ணனை வைத்து கங்கை அமரன் பல படங்களை ஹிட் அடித்து உள்ளார்.

Also Read : கமலின் சூப்பர் ஹிட் படத்தை இயக்க மறுத்த பாலச்சந்தர்.. பிரிவியூ ஷோ பார்த்துட்டு இளையராஜா விட்ட சபதம்

கங்கை அமரனும் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் தான். கங்கை அமரன் 50 க்கு மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இப்படி சகோதரர்கள் என்பதை தாண்டி நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இருவருக்குள் ஒரு படத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

இந்த பிரச்சினையால் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இந்த ஆண்டு தான் தங்களுக்குள் உள்ள மனக்கசப்பை விட்டு இருவரும் சேர்ந்தனர். இது அவர்கள் இரு குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read : ஆல் ரவுண்டராக இருக்கும் இளையராஜாவின் வாரிசு.. விரைவில் கொடுக்கப் போகும் புது அவதாரம்

Trending News