புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

தலைவர் அக்மார்க் சங்கி தான்.. ரஜினியை சீண்டிய பிரபலம்

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்துள்ள நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி பேசுகையில் தன்னுடைய படங்களுக்கு போட்டி நான் தான் என்று கூறியிருந்தார். மேலும் சமீபத்தில் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் ரஜினி பங்கு பெற்றார்.

அதோடு மட்டுமல்லாமல் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது அப்போது சர்ச்சையானது. இதன் காரணமாக ரஜினியை சங்கி என்று பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் லால் சலாம் மேடையில் ரஜினியின் மகளும், லால் சலாம் படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதுகுறித்து பேசி இருக்கிறார்.

அதாவது அப்பாவை சங்கி என்று சொல்லும் போது எனக்கு கோபம் வரும். ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஏனென்றால் சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. மேலும் எந்த மதமாக இருந்தாலும் லால் சலாம் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

Also Read : விஜய் எனக்கு போட்டியா!.. தன்னுடைய ஸ்டைலில் ரசிகர்களுக்கு பதில் சொன்ன ரஜினி

இதை அடுத்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினியை சீண்டும்படி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது தலித் மற்றும் இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும் அந்த சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும் தான். உதாரணமாக காலா, கபாலி மற்றும் லால் சலாம் படங்களில் ரஜினி பணத்துக்காக தான் நடித்திருக்கிறார்.

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார், மணிபூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார், தமிழ்நாடு நன்றாக அறியும் தலைவர் அக்மார்க் சங்கி என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : எங்க அப்பா சங்கியா!. லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அதிரடி பேச்சு

Trending News