Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஜனநாயகன் படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்.. காரணம் இதுதான்

ஜனநாயகன் படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்.. காரணம் இதுதான்

Vijay : விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு ஒட்டு மொத்த சினிமாவும் இந்த படத்தை எதிர்பார்த்து வரும் நிலையில் ஜனநாயகன் […]

Vijay : விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு ஒட்டு மொத்த சினிமாவும் இந்த படத்தை எதிர்பார்த்து வரும் நிலையில் ஜனநாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் பிரபலம் ஒருவர்.

அதாவது சோசியல் மீடியாவில் இருந்து வெள்ளிதிரைக்கு பலர் இப்போது படையெடுக்கின்றனர். ரசிகர்களும் தினமும் யூடியூபில் வீடியோக்கள் பார்த்து வருவதால் அவர்களை பெரிதும் வரவேற்கின்றனர். அவ்வாறு ஜனநாயகன் படத்தில் டிக் டாக் பிரபலம் கனிக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அந்த கதாபாத்திரம் கனிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஜனநாயகன் படத்தின் வாய்ப்பை நிராகரித்ததாக கூறியிருக்கிறார். இவ்வளவு பெரிய நடிகரின் பட வாய்ப்பு எளிதில் அவர் வேண்டாம் என்று சொன்னது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஜனநாயகன் படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்

விஜய் பட வாய்ப்பு கிடைக்காதா என பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் கனி வாய்ப்பை நழுவ விட்டு விட்டார். மேலும் கனியின் தந்தை யூடியூப் சேனலே தொடங்கக்கூடாது என்று ஆரம்பத்தில் கூறிவிட்டாராம்.

அதன் பிறகு கெஞ்சி கூத்தாடி தான் அனுமதி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் படங்களில் நடிக்க அவரது தந்தை சம்மதிக்க மாட்டார் என்பதை திட்டவட்டமாக கனி கூறி இருக்கிறார். மேலும் யூடியூபில் வரும் வருமானமே போதும் என்று சொல்லி உள்ளார்.

அதன் மூலம் தங்களது குடும்பத்தை நடத்தி வருகிறோம். மேலும் ஜனநாயகன் படம் மட்டுமல்லாமல் வேறு சில படங்களிலும் தனக்கு வாய்ப்பு வந்தது. அந்தப் படங்களையும் நிராகரித்து விட்டதாக கனி கூறி உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.