வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரம்யா கிருஷ்ணனின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட பிரபலம்.. பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்த நடிகர்

ரம்யா கிருஷ்ணன் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகத் துணிச்சலான நடிகையான ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி, சிவகாமி தேவி கதாபாத்திரங்கள் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஒருமுறை ரம்யா கிருஷ்ணனின் தாயாரை ஒரு பிரபலம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதாவது நாகேஷ் இயக்கத்தில் உருவான பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தில் ஆனந்த்பாபு உடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

Also Read : கோர்ட், கேஸ் என்று அலைய முடியாது.. படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட ரம்யா கிருஷ்ணன்

அந்த சமயத்தில் நாகேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் இயக்குனர் கேஎஸ் ரவிகுமார். அப்போது இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி எடுக்க நாகேஷ் வீட்டில் ஒத்திகை நடந்து வந்துள்ளது. அந்த சமயத்தில் கே எஸ் ரவிக்குமார் நாகேஷின் இளைய மகனுடன் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

அதாவது பொம்மை துப்பாக்கியை வைத்து அதில் ஈயத்தால் செய்த புல்லட்டை வைத்து சுட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ரம்யா கிருஷ்ணனுக்கு துணையாக அவரது அம்மா தன்னுடைய கையை குறி வைத்து சுடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அந்த குறி தவறி ரம்யா கிருஷ்ணனின் அம்மா தோள்பட்டையில் புல்லட் பாய்ந்து விட்டது.

Also Read :ரஜினி, ரம்யா கிருஷ்ணனுக்காக 11 டேக் எடுத்த KS ரவிக்குமார்.. 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

உடனே அங்குள்ளவர்கள் பதறிப் போய் உள்ளனர். மேலும் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்பு அவருக்கு சிகிச்சை அளித்த தோள்பட்டையில் உள்ள புல்லட்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர்.

கே எஸ் ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணனின் அம்மாவிடம் தவறுதலாக நடந்து விட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்பின்பு தனது படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு ரஜினிக்கு இணையாக நீலாம்பரி என்ற வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் கேஎஸ் ரவிக்குமார்.

Also Read :ரம்யா கிருஷ்ணன், சோவுக்கு இப்படி ஒரு உறவா.? 16 வருடம் கழித்து கிடைத்த பாராட்டு

Trending News