Serial: பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும். அதனால் அவர்களுடைய சேனலும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகளை பெற்று விடும். ஆனால் ஒரு சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெறாததால் அந்த சீரியல்களை உடனடியாக தூக்கி விடுவார்கள். அதற்கு பதிலாக புத்தம்புது சீரியல்களை இறக்கி மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.
ஆனால் தற்போது ஆரம்பித்த ஒரு சீரியல் மக்கள் மனதில் நன்றாக இடம் பிடித்து டிஆர்பி ரேட்டிங்கிலும் ஓரளவுக்கு அதிக புள்ளிகள் பெற்று வந்தாலும் சேனல் தரப்பில் இருந்து பெரிதாக திருப்தி அடையாததால் அந்த சீரியலை இன்று முடிக்கும் வகையில் கிளைமாக்ஸ் காட்சியை கொண்டு வந்து விட்டார்கள்.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் இன்றுடன் முடியப்போகிறது. இந்த சீரியல் கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் முடியப்போகிறது. இதில் ஜெய் ஆகாஷ், கௌதம் என்ற கேரக்டரில் ஒரு லவ்வர் பாயாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து அவருக்கான ஒரு அங்கீகாரத்தை நிரூபித்து விட்டார்.
அதே மாதிரி ரேஷ்மா, மது என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்து விட்டார். அத்துடன் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி மக்கள் கொண்டாடும் இந்த தருணத்தில் நாடகத்தை முடித்து விடலாம் என்று சேனல் முடிவு பண்ணி விட்டார்கள். இதற்கான கதை ஏற்கனவே உள்ளம் கொள்ளை போனதே என்ற டப்பிங் சீரியலில் இருந்து தான் எடுத்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் உள்ளம் கொள்ளை போகுதே என்ற சீரியல் மெகா நெடுந்தொடராக போய்க் கொண்டிருந்த நிலையில் இந்த சீரியலை ஆரம்பித்த 148 நாட்களிலே முடிப்பதற்கான காரணம் என்னவென்று யூகிக்க முடியாத அளவிற்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தைக் இல்லாத சீரியல் முடிவுக்கு வந்து மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.
இன்னொரு காரணம் என்னவென்றால் புத்தம் புது சீரியல்கள் எல்லாம் வரிசையில் இருப்பதால் என்னமோ இந்த சீரியலை தூக்கி விட்டார்கள் என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். ஆனாலும் ஜெய ஆகாஷ், சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும் அவர் நடித்த சீரியல்கள் பாதியிலேயே நிற்கும் படியாக தான் அமைந்துவிடுகிறது.
இப்படித்தான் இதற்கு முன்னாடி ஆரம்பித்த நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் பாதிலே தான் முடித்தார்கள். அந்த வரிசையில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலும் நிறுத்தப் போகிறார்கள். இந்த இரண்டு சீரியலுமே ஜெய் ஆகாசுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.