திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது.. தொகுப்பாளினிக்கு செக் வைத்த சேனல்

Gossip: பிரபல தொகுப்பாளினி கிளப்பி இருக்கும் விஷயம்தான் சம்பந்தப்பட்ட சேனலை கிடுகிடுக்க வைத்துள்ளது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சேனல் தரப்பு இப்போது அடுத்து என்ன செய்வது என தீவிர ஆலோசனையில் இருக்கிறார்களாம்.

இதற்கு முக்கிய காரணம் ஆணவத்தில் ஆடிய சீனியரின் நடவடிக்கைகள் தான். பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் இவர் தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து இப்போது படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.

ஆனாலும் இந்த விவகாரம் அவ்வளவு எளிதில் முடியும் என தெரியவில்லை. ஏனென்றால் சீனியரிடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. அதனாலயே அவர் ஏதோ பெருசாக செய்ய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

சேனல் எடுத்த திடீர் முடிவு

ஆனால் சேனல் பெயர் இப்போது கெட்டுப் போனதில் அவர்கள் சீனியரை கொஞ்சம் தட்டி வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்படி கோபமாக சென்ற அந்த தொகுப்பாளினியை சமாதானப்படுத்தி மீண்டும் வர வைக்கும் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறதாம்.

மேலும் முக்கிய நிகழ்ச்சி அவர் கைக்கு மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனால் சீனியர் தான் இப்போது அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

ஆனால் மற்றொரு போட்டி சேனலும் தொகுப்பாளினியை தன் பக்கம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதில் யார் முந்துவார்கள் என விரைவில் தெரிந்து விடும்.

ஆணவத்தில் ஓவர் ஆட்டம் போட்ட தொகுப்பாளினி

Trending News