வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமன்னனில் தண்டத்துக்கு வந்து போன கீர்த்தி சுரேஷ்.. வசனமே இல்லாமல் ஸ்கோர் செய்த கேரக்டர்!

Actress Keerthy Suresh: மாமன்னன் படம் வெளியாகி ஒரு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அப்படம் பற்றிய விமர்சனங்கள் குறைவதாக இல்லை. தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இப்போது ஓடிடி தளத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிலும் ரத்னவேலு என்ற கேரக்டரில் கொடூர வில்லனாக நடித்திருந்த பகத் பாசில் இப்போது ஹீரோவாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவர் தான் சோசியல் மீடியாக்களை ஆதிக்கம் செய்து வருகிறார்.

Also read: சக்திவேலா, ரத்னவேலா.? சாதிய வெறியை தூண்டிய மாரி செல்வராஜ், மாமன்னன் பற்ற வைத்த நெருப்பு

அந்த வகையில் தற்போது மாமன்னனில் மற்றொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதிலும் கீர்த்தி சுரேஷ் எல்லாம் இப்படத்தில் தண்டமாக வந்து சென்றிருக்கிறார், ஒரு கேரக்டர் தான் சிறப்பாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி ட்ரெண்டாகி வரும் அந்த கேரக்டர் தான் ரத்னவேலுவின் மனைவியாக வரும் ஜோதி. நடிகையும், டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான ரவீனா நடித்துள்ள அந்த கேரக்டர் அளவுக்கு ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் கேரக்டர் பெரிய அளவில் ரசிக்கப்படவில்லை. வெறும் பாடல் காட்சிகள், நான்கு சீன் என வந்து செல்லும்படியாகத் தான் இருந்தது.

Also read: மாமன்னன் பட ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா.? பாவம் மாரி செல்வராஜே கன்பியூஸ் ஆயிட்டாரு

ஆனால் இந்த ஜோதி வசனமே இல்லை என்றாலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். வேண்டிய இடத்தில் கணவனை தடுத்து இரு சமூகத்திற்கு இடையே பெரும் பிரச்சனையாகாமல் பார்த்துக் கொண்ட இந்த கேரக்டர் தான் சமூக அக்கறை கொண்ட கேரக்டர் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வசனமே இல்லாமல் ஸ்கோர் செய்த கேரக்டர்

maamannan-raveena
maamannan-raveena

இதன் மூலம் ரவீனா தனக்கான ஒரு அடையாளத்தை பதிவு செய்துவிட்டார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷை ஓவர் டேக் செய்த இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக ஸ்கோர் செய்த இவர் நடிகையாகவும் தன்னை நிரூபித்து விட்டார்.

Also read: தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த மாமன்னன்.. வசூலுக்கு எண்டு கார்ட் போட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்த உதயநிதி

Trending News