வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ரஜினி.. பெயரைக் கெடுத்த அந்த கதாபாத்திரம்

ரஜினி ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதன்பிறகு ஹீரோ அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்தார். மக்களுக்கும் அவரது ஸ்டைல், நடிப்பு பிடிக்க அவரை கொண்டாட தொடங்கினர். அந்த காலகட்டத்தில் பல ஹிட் படங்களை ரஜினி தொடர்ந்து கொடுத்து வந்தார்.

அப்போது துணிச்சலாக ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். மற்ற நடிகர்களாக இருந்தால் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் ரஜினியின் தனது குரு கே பாலச்சந்தர் திரைக்கதையில் உருவான நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார்.

எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, லட்சுமி, சரிதா, மேனகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த லட்சுமி அதன்பின்பு படையப்பா படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படத்தில் சக்கரவர்த்தி, சந்தோஷ் என்று அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தை ஏற்று ரஜினி நடித்திருந்தார்.

கோடீஸ்வர தொழிலதிபரான சக்கரவர்த்தி தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கக்கூடியவர். அவரது மகன் சந்தோஷம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். சக்கரவர்த்தியின் நடவடிக்கை பிடிக்காததால் அப்பா, மகன் இடையே கடுமையான போர் நடக்கிறது.

கடைசியில் யார் ஜெயித்தார் என்பதே படத்தின் கதை. இந்நிலையில் ரஜினியை மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் அவர் பெயர் கெட்டுப் போய்விடும் என கொஞ்சம் கூட யோசிக்காமல் ரஜினி நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் நெற்றிக்கண் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து ரஜினி சூப்பர் ஸ்டார் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மேலும் தற்போது உள்ள ஹீரோக்கள் ரஜினியைப் போன்ற டாப் ஹீரோக்களாக உள்ளபோதே நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர்.

Trending News