திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

5 விஷயங்களில் ரோகிணிக்கு வைத்த செக், போன் மூலம் முத்துக்கு வரும் சந்தேகம்.. தொழிலதிபராக மாறிய மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து சொன்னபடி மீனா தொழிலதிபராக மாறுவதற்கு ஒரு அஸ்திவாரம் கிடைத்திருக்கிறது. இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ரவியுடன் சேர்ந்து பிரியாணி பண்ணி வீட்டில் இருப்பவர்களுக்கு ட்ரீட் கொடுத்து விடுகிறார். ஆனால் விஜயா மற்றும் மனோஜ், விரதம் என்பதால் அவர்களால் மட்டும் சாப்பிட முடியாமல் போய்விட்டது.

இதில் எவ்வளவு தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் பிரச்சினைகள் இருந்தாலும் பிரியாணி வாசனை வந்ததும் முதல் ஆளாக போயிட்டு ரோகிணி வயிறார சாப்பிட்டு விட்டார். அடுத்ததாக பிரவுன் மணி நேரடியாக வித்யா வீட்டிற்கு வருகிறார். வித்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி ரோகிணியை பார்த்து பேச வேண்டும் என வர சொல்லுகிறார்.

அதன்படி வித்யா, ரோகினிக்கு போன் பண்ணி உடனே உன்னிடம் பேச வேண்டும் சீக்கிரம் வீட்டுக்கு வா என்று வர சொல்கிறார். ரோகிணியும் பயந்து போய் வித்யா வீட்டிற்கு வந்துவிடுகிறார். வந்த பிறகு பிரவுன் மணி என்னுடைய கடைக்கு மீனா கறி வாங்க வந்திருந்தார். ஆனால் நான் மாட்டி இருந்தால் தேவையில்லாத பிரச்சினை ஆகி விடும் என்பதால் நான் மீனா கண்ணில் சிக்காமல் தப்பித்து விட்டேன்.

ஆனாலும் இனி வாரவாரம் என்னுடைய கடைக்கு வந்து தான் கறி வாங்குவேன் என்று சொல்லிட்டு போயிருக்கிறார். நானா போய் யாரிடமும் உண்மை சொல்ல மாட்டேன். அதே நேரத்தில் நான் மாட்டிக் கொண்டால் எனக்கு தெரிந்த எல்லா உண்மையும் சொல்லிவிட்டு நான் தப்பித்து விடுவேன் என பிரௌன் பண்ணி சொல்லிவிட்டு போய்விடுகிறார். இதனால் பயந்து போன ரோகிணி என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

அந்த நேரத்தில் க்ரிஷ் போன் பண்ணி கடற்கரைக்கு கூட்டிட்டு போக சொல்லி வற்புறுத்துகிறார். ரோகிணியும் நான் வருகிறேன் இப்பொழுது வேலையாக இருக்கிறேன் அப்புறமா கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்தி விடுகிறார். அடுத்ததாக முத்து மற்றும் மீனா இருவரும் சந்தோஷத்துடன் வெளியே போய்க்கொண்டிருக்கிறார்கள். மீனாவுக்கு சர்ப்ரைஸ் ஆக தொழிலதிபர் என்று விசிட்டிங் கார்டை அடித்து கொடுக்கிறார்.

இதை உனக்கு தெரிந்தவர்களுக்கும் எனக்கு தெரிந்தவர்களுக்கும் நாம் கொடுப்போம். அதன் மூலம் தொடர்ந்து நமக்கு நிறைய ஆர்டர் கிடைக்கும். அந்த வகையில் நம் குடும்பத்தில் பெண் தொழிலதிபராக நீ முதலில் வெற்றி பெற வேண்டும் என்று சந்தோசமாக பேசிக்கொண்டு வருகிறார்கள். என்னதான் தற்போது வரை ரோகிணி யாரிடமும் மாட்டாமல் இருந்தாலும் இப்பொழுது ரோகிணிக்கு செக் வைக்கும் விதமாக ஐந்து விஷயங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

அதாவது ஒரு பக்கம் மலேசியா மாமா என்று பொய் சொல்லிக்கொண்டு திரியும் பிரவுன் மணி, இன்னொரு பக்கம் அண்ணாமலை வேலை பார்க்கும் ஸ்கூலில் க்ரிஷ் படிக்கிறார். அடுத்ததாக சிட்டி மற்றும் PA சேர்ந்து ரோகிணியின் ரகசியங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் பிளாக்மெயில் பண்ணுகிறார்கள். அடுத்ததாக வித்தியா, முத்துவின் போனை செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விட்டுட்டு போயிருக்கிறார். இதனை தொடர்ந்து கிரிஷ் பாட்டியை கண்டுபிடிக்கும் விதமாக முத்து எடுக்கப் போகும் முயற்சி.

இப்படி இந்த ஐந்து விஷயங்களில் ரோகிணி மாட்டிக் கொண்டு இருப்பதால் ஒவ்வொரு விஷயங்களாக வெளிவரப் போகிறது. அந்த வகையில் முதலில் முத்து கைக்கு கிடைக்கப்போகும் அவருடைய தொலைந்து போன போன். அதன்மூலம் யார் எங்கே போட்டுட்டு போனா எப்படி வந்துச்சு என்ற விஷயங்களை தெரிந்து கொள்ளப் போகிறார். அதன்படி முத்துவின் ஃபோனில் இருந்து சத்யாவின் வீடியோவை ரோகிணி மொபைலுக்கு தான் அனுப்பி வைத்திருந்தார்.

அந்த வகையில் ரோகினி ஏன் அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடனும், எப்படி இந்த விஷயம் நடந்தது என்று ஒவ்வொரு ரகசியத்தையும் முதலில் கண்டுபிடிக்கும் விதமாக முத்து அவருடைய ஆட்டத்தை ஆடப்போகிறார். இனி யார் நினைச்சாலும் ரோகிணி மாட்டிக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

- Advertisement -spot_img

Trending News