சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விக்ரம் வேதா போல் எதிரும் புதிருமாக நடித்த பிரபல நடிகர்கள்.. மறக்கமுடியாத 5 படங்கள்

ஒரே படத்தில் மாஸான இரண்டு ஹீரோக்கள் நடிக்கும்போது படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அந்தப் படங்களில் நேரெதிராக மோதிக்கொள்ளும் இரண்டு ஹீரோக்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். அவ்வாறு இரு துருவங்களாக இருக்கும் ஹீரோக்கள் இணையும் 5 படங்களை பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம் : மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அக்னி நட்சத்திரம். இப்படத்தில் கார்த்திக் மற்றும் பிரபு இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்களாக உள்ளனர். அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் இருவரும் தங்களின் தந்தையின் உயிருக்கு ஆபத்து எனும் போது ஒன்றாக சேர்ந்து செயல்படுகிறார்கள்.

இணைந்த கைகள் : என் கே விஸ்வநாதன் இயக்கத்தில் அருண் பாண்டியன், ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இணைந்த கைகள். இப்படத்தில் அருண்பாண்டியன் முன்னாள் ராணுவ வீரராகவும், ராம்கி ஒரு குற்றவாளியாகவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் சிப்பாயை பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போராடுகிறார்கள்.

உல்லாசம் : அஜித், விக்ரம், மகேஸ்வரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உல்லாசம். இப்படத்தில் கடத்தல்காரராக இருக்கும் விக்ரமின் தந்தையால் அஜித் கவலைப்படுகிறார். விக்ரம் ஒரு நேர்மையான மனிதரின் அரவணைப்புடன் அஜித்தின் அப்பாவால் வழங்கப்படுகிறார். இதனால் அஜித் மற்றும் விக்ரம் இருவரும் இரு துருவங்களாக இருக்கின்றனர். அப்போது அவர்களின் காதலியை கடத்தி செல்லும்போது ஒற்றுமையாக செயல்பட்டு அவர்களை விழ்த்துகிறார்கள்.

நேருக்கு நேர் : வசந்த் இயக்கத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான நேருக்கு நேர். இப்படத்தில் திருமணமான தம்பதிகளில் உடன்பிறந்தவர்களாக சூர்யா மற்றும் விஜய் இருவரும் நடித்துள்ளனர். எப்போதும் நேர் எதிராக இருக்கும் இவர்கள் தங்களின் உடன்பிறந்தவர் குழந்தை கடத்தப்படும் போது இருவரும் இணைந்து மீட்க போராடுகிறார்கள்.

விக்ரம் வேதா : மாதவன், விஜய் சேதுபதி, சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் விஜய் சேதுபதி வேதா என்ற கேங்ஸ்டராக நடித்திருந்தார். அவரை வேட்டையாடும் விக்ரம் என்ற காவலராக மாதவன் நடித்து இருந்தார். பின்பு வேதாவிடம் நல்ல குணம் இருக்கிறது என்பதை அறிந்த விக்ரம் அவருடன் இணைந்து குற்றவாளிகளை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்க்கிறார்.

Trending News