Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மூன்று வாரங்களைக் கடந்த வேட்டையன்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

மூன்று வாரங்களைக் கடந்த வேட்டையன்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

Vettaiyan Collection : ரஜினியின் நடிப்பில் உருவான வேட்டையன் படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10 வெளியானது. ஜெய் பீம் என்ற வித்தியாசமான வெற்றி படத்தை கொடுத்த டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு […]

Vettaiyan Collection : ரஜினியின் நடிப்பில் உருவான வேட்டையன் படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10 வெளியானது. ஜெய் பீம் என்ற வித்தியாசமான வெற்றி படத்தை கொடுத்த டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வேட்டையன் படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் விரைவில் ஓடிடியில் வர இருக்கிறது. இந்நிலையில் இதுவரை வேட்டையன் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. ரஜினி ஹீரோவாக நடித்த முந்தைய படம் ஜெயிலர்.

இந்த படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூலை அள்ளியது. ஆனால் வேட்டையன் படம் குறைந்த பட்ஜெட்டில் உருவான நிலை 15 நாட்களில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 250 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

மூன்று வாரங்களில் வேட்டையன் படத்தின் வசூல்

சென்னையில் புயல் மற்றும் மழை பாதிப்பால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் தியேட்டர்களும் மூடப்பட்டிருந்தது. ஆகையால் வேட்டையன் வசூல் எதிர்பார்த்த அளவு வரவில்லை. ஆனாலும் லைக்காவிற்கு வேட்டையன் படத்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை.

போட்ட பட்ஜெட்டை எடுத்ததால் ஓரளவு நல்ல லாபத்தை பெற்றிருக்கிறது. அதோடு டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவை நல்ல விலைக்கு போனதால் லைக்கா தலை தப்பியது. மேலும் அடுத்ததாக விடாமுயற்சி படத்தை வெளியிடும் முயற்சியில் லைக்கா செயல்பட்டு வருகிறது.

அதாவது பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படபிடிப்பு ஒரளவு முடிந்திருக்கிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு கண்டிப்பாக விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்த விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.