சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. இதன் ட்ரெய்லர் வெளியான நிலையிலேயே இப்படம் தேசிய அளவில் மிகப்பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதை தொடர்ந்து படம் வெளியாக கூடாது என பல போராட்டம் நடைபெற்றது.
ஆனாலும் படம் சொன்ன தேதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இருப்பினும் இந்த பட விவகாரம் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. மேலும் படத்தை பார்த்த பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் கொடுத்தனர். அந்த அளவுக்கு தி கேரளா ஸ்டோரி சர்ச்சையை கிளப்பியது.
Also read: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நடந்த வசூல் வேட்டை.. தி கேரளா ஸ்டோரி பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்
இதற்கு முக்கிய காரணம் படத்தில் இஸ்லாமிய மதத்தை தவறாக சித்தரித்தது தான். அது மட்டுமல்லாமல் பல முரண்பாடான காட்சிகளும் படத்தில் இருந்தது மக்களிடையே ஒரு கொதிப்பை ஏற்படுத்தியது. அதனாலேயே பலரும் தங்கள் சோசியல் மீடியாக்களில் இப்படம் குறித்து தங்கள் அதிருப்திகளை தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
Also read: ஹாலிவுட் படத்தையே ஓவர் டேக் செய்த ‘தி கேரளா ஸ்டோரி’.. ஒரே வாரத்தில் மிரண்டு போன பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது.
மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது.
Also read: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ஒரு வார வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா.? மிரண்ட பாக்ஸ் ஆபிஸ்