திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பணத்திற்காக சந்தானத்தை ஃபாலோ பண்ணும் காமெடியன்.. போங்க பாஸ் இப்படி அசிங்கப்பட்ட பலபேரை பார்த்தாச்சு

தமிழ் சினிமாவில் 80 காலக்கட்டத்திலிருந்து ஆரம்பகால 2000 காலகட்டம் வரை காமெடி நடிகர் என்றால் காமெடி நடிகர்களாக மட்டுமே நடிப்பார்கள். ஹீரோக்கள் என்றால் ஹீரோக்களாக மட்டுமே நடிப்பார்கள். அதேபோன்று துணைக் கதாபாத்திரம் நடிகர்கள் என்றால் துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் தற்போது உள்ள காலகட்டம் அப்படியில்லை. சில இசை அமைப்பாளர்கள் கூட ஹீரோக்களாகவும், வில்லனாகவும் கலக்கி வருகின்றனர்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்த நிலையில், அவர்களின் மார்கெட் சற்று குறையவே நடிகர் சந்தானம் காமெடியில் கலக்கினார். முன்னணி ஹீரோக்களின் நண்பனாக அதிக திரைப்படங்களில் வலம் வந்த சந்தானம் தீடீரென ஹீரோவாக களம் இறங்கினார்.

Also Read : அடுத்தடுத்த தோல்வியால் சிக்கி தவிக்கும் சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் இதில இருந்து தப்புமா?

இவர் ஹீரோவாக அறிமுகமாகி ஏழு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை எந்த ஒரு காமெடி காட்சிகளிலும் எந்த ஒரு நடிகருடனும் சந்தானம் நடிக்காமல் உள்ளார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என மொக்கை படங்களில் கூட சந்தானம் கமிட்டாகி நடித்து வருவதாக கோலிவுட்டில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தை தொடர்ந்து யோகிபாபு, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் காமெடி நடிகர்களாக வலம் வருகின்றனர். ஆனால் தற்போது இந்த மூன்று பேருமே காமெடி நடிகர்களை தாண்டி ஹீரோக்களாக சில திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே தற்போது நடிகர் சதீஷ் காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில், இந்த வருடம் ஜனவரியில் ரிலீசான நாய் சேகர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

Also Read : சதீஷ் சொன்னது எல்லாம் பொய்.. வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தம்

அத்திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்தவொரு திரைப்படத்திலும் சதிஷை காமெடி நடிகராக நம்மால் பார்க்க முடிவதில்லை. இதற்கான காரணம், நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சந்தானம் போல் நடிகர் சதீஷ் தற்போது கூறி வருகிறாராம். மேலும் கொஞ்சம் நாள் காமெடி காட்சிகளில் நடிப்பதை சற்று ஒதுங்க உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்.

இதனிடையே தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் நடித்த நாய் சேகர் திரைப்படம் ஹிட்டாகவில்லை என்றாலும் அத்திரைப்படத்தை தொடர்ந்து, காமெடி நடிகராக நான் வேறு எந்த ஹீரோவுடன் நடிக்க மாட்டேன் என உறுதியோடு வலம் வருகிறார் சதிஷ்.

Also Read : தூக்கத்தைத் தொலைத்த சூரி.. வீட்டை விட்டு கிளம்பினாலே பசங்க கூட அசிங்கப்படுத்தறாங்க என புலம்பல்

Trending News