S.A.Chandrasekar: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பல வருடங்களாக அவருடைய மகனுடன் கருத்து வேறுபாடு காரணமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார். இதற்கான காரணம் விஜய்யிடன் கேட்காமல் அரசியல் கட்சி குறித்த முடிவை பொதுவெளியில் சந்திரசேகர் பேசியது தான் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரின் பிரிவிற்கு விஜய்யின் மனைவி சங்கீதாவும் காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் சுவாமியப்பன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து வரும் இந்த சீரியலில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையிலே, பல கோடி சொத்துக்கள் இருந்தும் எஸ்.ஏ.சி இந்த சீரியலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Also Read: வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வந்த விஜய்யின் நண்பரை எஸ்.ஏ.சி விஜய்யை பழிவாங்குவதாக நினைத்து அந்த நடிகரை சீரியலை விட்டு பாதியிலேயே விலக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியலில் ரேணுகா என்ற கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இந்த சீரியலின் கதாநாயகனாக நடிகர் வெங்கட் ரங்கநாதன் ஷண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரத்தில் தேர்வானது நடிகர் விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தான். நடிகர் சஞ்சீவ் வெள்ளித்திரையில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் திருமதி செல்வம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர் ரசிகர்களை கவர முடியாமல் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
Also Read: அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. விஜய்யை குத்திக் காட்டிய எஸ் ஏ சந்திரசேகர்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பு தான் கிழக்கு வாசல். ஆரம்பத்தில் சில எபிசோடுகளில் நடித்து வந்த சஞ்சீவ் வயது மூப்பு காரணமாக இந்த சீரியலிலிருந்து வெளியேற்றிப்பட்டார் என்ற பேச்சு நிலவியது. ஆனால் அதற்கு முக்கியமான காரணமாக எஸ்.ஏ.சந்திரசேகர் தானாம். நடிகர் விஜய் எஸ்.ஏ.சியிடம் என்றைக்கு பேசுவதை நிப்பாட்டினாரோ, அன்றைக்கே சஞ்சீவ் உள்பட அவரது நண்பர்களும் அவரை மதிக்காமல் விட்டதாக பேசப்படுகிறது.
இதை மனதில் வைத்துக்கொண்டு தான் எஸ்.ஏ.சி, நடிகை ராதிகாவிடம் சொல்லி நடிகர் சஞ்சீவை இந்த சீரியலிலிருந்து விலக்கவைத்துள்ளார். தற்போது இவர் செய்த இந்த மட்டமான செயலால், நடிகர் சஞ்சீவ் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். தனது மகனை பழிவாங்கும் பொருட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இன்னொருவரின் வயிற்றில் அடித்தது, சற்றும் சரியானதல்ல என இவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read: ராதிகாவின் கிழக்கு வாசல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.. விஜய்யின் அப்பாவுடன் செட் ஆகல