அனிருத் இடத்தை பிடித்த இசையமைப்பாளர்.. வரிசைகட்டி நிற்கும் 5 படங்கள்

Anirudh: இப்போது யுவன், ஜிவி பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள் சில படங்களில் தான் இசையமைத்து வருகிறார்கள். அனிருத் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். அனிருத்தை ஓரம் கட்டும் அளவுக்கு சமீபத்தில் ஒரு இசையமைப்பாளர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

அதாவது இண்டிபென்டென்ட் பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் சாய் அபயங்கர். இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. சூர்யாவின் 55 வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார்.

அனிருத் இடத்தைப் பிடித்த சாய் அபயங்கர்

sai
sai

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார். இதற்கு அடுத்தபடியாக அட்லி, அல்லு அர்ஜுன், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளராம்.

மேலும் தொடர் வெற்றி கொடுத்து வரும் பிரதீப் ரங்க நாதனின் நான்காவது படத்திலும் இவர் கமிட்டாகி உள்ளார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது பென்ஸ் படம். லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

பென்ஸ் படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளர். அடுத்ததாக சிம்புவின் 49வது படத்திற்கு இசையமைக்கவும் இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவ்வாறு குறுகிய காலத்தில் அபரிவிதமான வளர்ச்சியை சாய் அபயங்கர் அடைந்துள்ளார்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்