Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், எதற்குமே அசராமல் யாருக்கும் அஞ்சாமல் குடும்பத்திற்காக தலையில் இடியே விழுந்தாலும் அதை பாரமாக நினைக்காமல் சிங்கப்பெண்ணாக இருந்து வந்த கயிலை ஒரே இடத்தில் முடக்கி விட்டது எழிலின் ஜாதகம். கயல் தனக்கென்று ஆசைப்பட்ட ஒரே விஷயம் எழிலை கல்யாணம் பண்ண வேண்டும் என்றுதான்.
ஆரம்பத்தில் எழில் நமக்கு செட்டாகாது என்று விலகிப் போய்க் கொண்டிருந்த கயிலை தேடித்தேடி எழில் காதலித்து வந்தார். பிறகு ஒரு கட்டத்தில் எழிலின் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட கயல், எனக்கு கல்யாணம்னு நடந்தால் அது எழிலோடுதான் என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் இவர்கள் இருவரும் அவருடைய காதலில் உறுதியாக இருப்பதால் எழிலின் அம்மா சிவசங்கரி என்ன பண்ணினாலும் அதை தடுக்க முடியாமல் போய்விட்டது.
எழிலை கல்யாணம் பண்ண முடியாமல் தவிக்கும் கயல்
அதனால் கூடவே இருந்து உறவாடி கெடுக்கலாம் என்று நல்லவராக வேஷம் போட்டு எழில் மற்றும் கயலின் நிச்சயதார்த்தத்தை அமோகமாக பண்ணி வைத்தார். இதை தொடர்ந்து கயல் எழில் கல்யாணம் நடக்கும். இனி பிரச்சனைகள் வந்தால் சர்வ சாதாரணமாக முறியடித்து விடலாம் என்று இருந்த நிலையில் கயலுக்கு பெரிய ஏமாற்றம் நடந்து விட்டது.
அதாவது கயலை எழில் கல்யாணம் பண்ணி விட்டால் எழில் உயிருக்கே ஆபத்து. அதனால் எழிலே உயிரோடு பார்க்க முடியாது என்று ஜாதகம் இருப்பது போல் கயல் காதுக்கு போய்விட்டது. ஆனால் இந்த ஜாதகம் உண்மை இல்லை, இதை சிவசங்கரி எப்படியோ மாற்றி எழுதி அனுப்பி கயல் அம்மாவிடம் கொடுத்து இருக்கிறார் என்ற உண்மை யாருக்கும் தெரியவில்லை.
இது தெரியாத கயல், கோவிலில் எழில்தான் எனக்கு முக்கியம் அதனால் நான் அவரை விட்டு விலகுகிறேன். என்னுடைய வீட்டில் எப்படியாவது சொல்லி எழிலே கல்யாணம் பண்ணாமல் போய்விடுவேன் என்று முடிவெடுத்தார். இந்த சூழலில் கயலை கடத்திட்டு போய் கொலை முயற்சி பண்ண சிவசங்கரி பற்றி உண்மையான முகம் தெரிந்துவிட்டது.
ஏற்கனவே எழிலை கல்யாணம் பண்ண முடியாது என்ற சோகத்தில் இருக்கும் கயலுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியாக சிவசங்கரியின் பேச்சும் வில்லத்தனமும் தெரிய வந்தது. இதனால் கயல், நானே ஒரு முடிவு எடுத்து விட்டேன். இனி உங்கள் மகனை நான் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் எழில் அம்மா சிவசங்கரி போட்ட பிளான் என்னவென்றால் சொன்னபடி குறிச்ச தேதியில் உங்களுடைய கல்யாண வேலைகள் நடக்கட்டும்.
ஆனால் நீ கடைசிவரை எழிலிடம் எதுவும் சொல்லாமல் மேடைக்கு வந்து அவனை ஏமாற்றி விடு என்று சிவசங்கரி ஒரு பிளான் போட்டு விட்டார். அதற்கு கயலும் சம்மதம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து அழுது புலம்புகிறார். இந்த சூழலில் கயலை பார்த்த மூர்த்தி உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு கயல் எதுவும் சொல்லாமல் சமாளித்து விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து மூர்த்தி, பெரியப்பாவை பார்த்து கயல் கல்யாணம் விஷயமாக பேசலாம் என்று வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்க மூர்த்தி இருப்பது தெரியாமல் பெரியப்பா மற்றும் வடிவு கயல் வாழ்க்கையை எப்படியாவது கெடுக்க வேண்டும். கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று பிளான் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை கேட்டு அதிர்ச்சியான மூர்த்தி, நாங்கள் என்ன பண்ணினோம். ஏன் எங்கள் வாழ்க்கையை கெடுப்பதற்கு இப்படி ஒரு திட்டத்தை போடுகிறீர்கள் என்று பெரியப்பாவை பார்த்து கேட்கிறார். அதற்கு வடிவு, கயல் கல்யாணம் நடக்கக்கூடாது. அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் கயல் எங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.
ஆனால் மூர்த்தி இப்படிப்பட்ட பெரியப்பா சகவாசமே வேண்டாம் என்று தங்கச்சியின் கௌரவத்தை காப்பாற்ற முடிவு எடுக்கப் போகிறார். இதையெல்லாம் தொடர்ந்து என்னதான் கயல் எழில் நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டும் என்று பல சதிகள் நடந்தாலும் கடைசியில் குறித்த தேதியில் கயல் எழில் கல்யாணம் நடந்தே தீரும்.
கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு
- சித்திக் கொடுமையில் இருந்து கஞ்சனிடம் சிக்க போகும் ஆதிரை
- எழிலின் ஜாதகத்தை மாற்றி சதி பண்ணிய சிவசங்கரி