செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

பழனிவேலு போட்ட கண்டிஷன், சுக்கு நூறாக உடைய போகும் பாண்டியன் குடும்பம்.. தம்பியை பகடக்காயாக ஆக்கிய சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் கல்யாணத்திற்கு ஒட்டுமொத்த குடும்பமும் வந்த நிலையில் பாண்டியனின் அக்காவாக வந்திருக்கும் குடும்பம், பெண் வீட்டார்கள் குடும்பம் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது என்று கோமதியிடம் சொல்கிறார். அதனால் இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்திலேயே கோமதி பயந்து கொண்டு இருக்கிறார்.

அத்துடன் பழனிவேலுவும் நம்ம கல்யாணத்திற்கு அம்மா இன்னும் வரவில்லையே என்று பரிதவித்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பழனிவேலுவை ஆசிர்வாதம் பண்ண அம்மா மற்றும் இரண்டு அண்ணிகள் என அனைவரும் வந்து விட்டார்கள். பிறகு பெண் வீட்டார் குடும்பத்துடன் பேசிய நிலையில் எல்லோரும் மேடைக்கு வந்து விட்டார்கள்.

அடுத்து தாலி கட்டும் அந்த தருணத்தில் பெண்ணுடைய அப்பா இந்த கல்யாணம் நடக்காது நிறுத்துங்க என்று சொல்லிவிடுகிறார். ஏன் என்று கேட்கும் பொழுது யாரும் எதுவும் சொல்லாமல் பெண்ணை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார்கள். ஆனால் இதற்கு பின்னாடி சக்திவேல் மற்றும் முத்துவேலுவின் சதிகள் தான் இருக்கிறது. அதாவது பாண்டியன் எதிர்பார்த்தபடியே சக்திவேல் மற்றும் முத்துவேல் பெண் வீட்டார் வீட்டிற்கு போய் இருக்கிறார்கள்.

அங்கே பழனிவேலுவை டேமேஜ் பண்ணும் அளவிற்கு பழனிவேலுக்கு என்று சுயமாக சம்பாத்தியம் கிடையாது. பாண்டியன் கடையில் எடுபிடி வேலைதான் பார்த்து வருகிறார் என்று வாய்க்கு வந்தபடி பெண் அப்பாவிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்துவதற்கு பேசிக் கொள்கிறார்கள். ஆனால் பெண்ணுடைய அப்பா நீங்கள் இப்படி எல்லாம் வந்து பண்ணுவீங்க என்று பாண்டியன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.

நானும் என்னுடைய பெண்ணை கொடுப்பதால் பாண்டியனை பற்றியும் அந்த குடும்பத்தை பற்றியும் வெளியில் நாலு இடத்தில் விசாரித்து விட்டேன். எல்லோருமே நல்ல விதமாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதை நம்ப மாட்டேன் தயவு செய்து வீட்டை விட்டு கிளம்பி போங்க என்று பெண்ணுடைய அப்பா தெளிவாக பேசிவிட்டார்.

இதனால் சக்திவேல் குறுக்கு புத்தியை பயன்படுத்தி இந்த ஒரு விஷயத்தை நான் சொல்லக்கூடாது என்றே நினைத்தேன். ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை வீணாக கூடாது என்பதற்காக என்னால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. என் தம்பிக்கு உடம்பு சரியில்லாமல் போன விஷயத்தை பாண்டியன் உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டார்.

அப்படி அவன் உடம்பு சரியில்லாமல் போன நிலையில் அவனால் ஒரு குழந்தைக்கு தாகப்பனாக முடியாது என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை சொல்லாமலும் இருக்க முடியாது என்பதற்காக நான் சொல்லிவிட்டேன். இனி உங்கள் மகளை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்களுடைய இஷ்டம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்கள்.

இதனால் குழப்பத்தில் பெண் வீட்டார்கள் மண்டபத்திற்கு வந்த நிலையில் கடைசி தாலிகட்டும் நேரத்தில் தன்னுடைய மகளின் வாழ்க்கையை யோசித்து இந்த கல்யாணமே வேண்டாம் என்று பாதிலேயே எழுத்து போய் விடுகிறார்கள். இதே தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப சக்திவேல் மற்றும் முத்துவில் மண்டபத்திற்குள் நுழைந்து அவங்க பார்த்து வைத்த பெண்ணை பழனிவேலு தலையில் கட்டி வைக்கப் போகிறார்கள்.

அப்பொழுது பாண்டியன் சம்மதம் தெரிவித்த நிலையில் பழனிவேலு போட்ட கண்டிஷன் என்னவென்றால் கல்யாணத்துக்கு பிறகு நான் என்னுடைய மச்சான் வீட்டில் தான் இருப்பேன் இதுக்கெல்லாம் சம்மதம் என்றால் எனக்கும் கல்யாணம் பண்ண ஓகே என்று சொல்வார். அதன்படி முத்துவேல் மற்றும் சக்திவேல் சம்மதம் கொடுத்து விடுவார்கள். அவர்கள் பார்த்த பொண்ணுதான் பாண்டியன் குடும்பத்தையே சுக்கு நூறாக உடைத்து பிரித்துக் காட்டப் போகிறார்.

Trending News