வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜனனியை தொடர்ந்து பிக் பாஸில் வெளியேறப் போகும் போட்டியாளர்.. நூலிலையில் தப்பிய ரக்ஷிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11 வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜனனி வெளியேறிய நிலையில் இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், ஷிவின், ரக்ஷிதா, தனலட்சுமி மற்றும் கதிரவன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதில் யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் முதல் ஆளாக விக்ரமன் காப்பாற்றப்படுகிறார். இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக ஷிவின் காப்பாற்றப்படுகிறார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டியாளர்

மேலும் அசீம், கதிரவன் ஆகியோரும் அடுத்தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளனர். கடைசியாக தனலட்சுமி மற்றும் ரக்ஷிதா உள்ள நிலையில் சின்னத்திரை தொடர் மூலம் கிடைத்த ரசிகர்களினால் ரக்ஷிதா அதிக ஓட்டுக்கள் வாங்கி காப்பாற்றப்பட்டுள்ளார். தனலட்சுமி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் மிகவும் சுறுசுறுப்பாகவும், எல்லா டாஸ்களிலும் ஈடுபாடுடன் இருந்தவர் தனலட்சுமி தான். மேலும் இந்த சீசனில் பிக் பாஸ் டிஆர்பி ஏற முக்கியமான காரணமாக தனலட்சுமி பார்க்கப்படுகிறார். தனது மனதில் பட்டதை தைரியமாக வெளியில் சொல்லும் தனலட்சுமிக்கு பேர் ஆதரவு உள்ளது.

Also Read : 9 இடங்களும் ஷிவினுக்கு தகுதி இல்லை.. ஒரே டாஸ்கால் கொழுந்துவிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

ஆகையால் இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி போவது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இவருடைய எவிக்ஷனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இவரைக் காட்டிலும் பிக் பாஸ் வீட்டில் மந்தமாக நிறைய போட்டியாளர்கள் உள்ள நிலையில் சூழ்ச்சியால் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார் என்று கூறுகின்றனர்.

மேலும் ஏடிகே மற்றும் மணிகண்டன் இருவரும் நாமினேஷன் ஃப்ரீ ஆனதால் இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து தப்பித்துள்ளனர். இல்லையென்றால் இவர்களுள் ஒருவர் தான் கண்டிப்பாக வெளியேறி இருப்பார்கள். பிக் பாஸில் கிடைத்த வரவேற்பு மூலம் தனலட்சுமிக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

Also Read : ஏற்கனவே டிஆர்பி மண்ணை கவ்விடுச்சே.. இதுல கண்டெண்ட் கொடுக்கும் பஜாரியை கழட்டி விடும் பிக் பாஸ்

Trending News