Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் என்னதான் சண்டை போட்டுக் கொண்டு பஞ்சாயத்து பண்ணி வன்மத்தை காட்டினாலும் இந்த ஒரு வாரம்தான் அவர்களுடைய உண்மையான மனசை பார்க்க முடியும் என்பதற்கேற்ப குடும்பங்கள் வந்ததும் எல்லாத்தையும் மறந்து அன்புக்காக ஏங்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படித்தான் இந்த வாரம் 12 போட்டியாளர்களின் குடும்பங்கள் உள்ளே நுழைந்து தன் பிள்ளைகளை கண்டிக்கும் விதமாகவும் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் விதமாகவும் சில முரண்பாடான கருத்துக்களை முன் வைத்தார்கள். ஆனால் கடைசிவரை தன் குடும்பத்தை மட்டும் காட்டவில்லை என்று ஒரு ஏக்கத்துடன் ஜாக்லின் உள்ளே இருந்தார்.
அந்த வகையில் பிக் பாஸ் அதற்கு ஏற்ற மாதிரி அனைத்து போட்டியாளர்களையும் வீட்டிற்குள் இருக்க வைத்து கதவையும் அடைத்து ஸ்கிரீனையும் போட்டு கொஞ்ச நேரம் உட்கார வைத்து விட்டார்கள். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் இருந்த நிலையில் அம்மா பாட்டு போட்டு ஜாக்லின்னை கலங்க வைத்து விட்டார்கள்.
இந்த ஒரு தருணத்திற்காக தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு ஏற்ப ஜாக்லின் மனசும் குளிர ஆரம்பித்துவிட்டது. இதனை தொடர்ந்து நாளை இன்னொரு சர்ப்ரைஸ் விஷயமும் நடக்க போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. அதாவது 12 போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களையும் ஒட்டுமொத்தமாக வீட்டுக்குள் அனுப்பி வைக்கப் போகிறார்கள்.
இதில் முக்கியமாக இரண்டு போட்டியாளர்களை எதிர்பார்க்கலாம். அதாவது அருணுக்கு காதலியாகவும் நண்பராகவும் மற்றும் முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னரை கைப்பற்றிய அர்ச்சனா உள்ளே போகப் போகிறார். அதே மாதிரி சௌந்தர்யாவின் நெருங்கிய நண்பர் விஷ்ணுவும் உள்ளே போகப் போகிறார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் கம்மியான ஓட்டுகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாயிருக்கிறது. அந்த வகையில் இரண்டு போட்டியாளர்கள் மிகக் கம்மியான ஓட்டுகளை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அன்சிதா மற்றும் ஜெப்ரி. ஆனால் இதில் ஜெப்ரி தான் வெளியே போகப் போகிறார்.
ஏனென்றால் நண்பர் என்ற முகமூடியே போட்டு இத்தனை நாளாக உள்ளே இருந்து கொண்ட ஜெஃப்ரி தற்போது ஜாக்லின்னை புறம் பேசும் விதமாக சௌந்தர்யாவிடம் பற்ற வைக்கிறார். அதாவது ஜெஃப்ரியிடம் ஜாக்லின் எதிர்ச்சியாக சொன்ன விஷயம் என்னவென்றால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நாம் அனைவரும் கோவாக்கு போகலாம் என்று கூறினார்.
அதற்கு ஜெஃப்ரி யோசித்த நிலையில் நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே நான் உன்னை கூட்டிட்டு போகிறேன் என்று சொன்னார். இந்த விஷயத்தை வேற மாதிரி சௌந்தர்யாவிடம் ஜெஃப்ரி சொல்லிவிட்டார். அதாவது என்னுடைய நண்பர்களையும் நான் தான் கூட்டிட்டு போவேன்.
உனக்கும் நான் பணம் போட்டு கூட்டிட்டு போகிறேன் என்று சொன்னதாக தவறாக புறம் பேசி விட்டார். அது மட்டும் இல்லாமல் இருப்பதிலேயே கேடி ஜாக்லின் தான். வெளியே போனால் நிச்சயமாக ஜாக்லின் கண்டு கொள்ளவே மாட்டார் என்று சில மோசமான வார்த்தைகளால் ஜெப்ரி பேசிவிட்டார்.
இது மட்டுமில்லாமல் கிட்டதட்ட பிக் பாஸ் வெற்றிக்குள் இருந்த ஒவ்வொரு நாளும் பெருசாக பங்களிப்பை கொடுக்க விட்டாலும் மற்ற போட்டியாளர்களிடம் உரிமையாக ஒட்டிக்கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு எலிமினேஷனில் இருந்தும் தப்பித்து இருக்கிறார். இந்த முறை தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை ஏனென்றால் அவர்தான் வெளியே போகப் போகிறார்.