புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பிக் பாஸ் ரிசல்ட் வரும் முன் வெற்றியை கைப்பற்றிய போட்டியாளர்.. நாளை வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சி என்னதான் மன அழுத்தத்தை கொடுக்கும் விதமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சி முடிய போகிறது என்றால் அனைவரது மனதிலும் கவலை வந்துவிடும். அதற்குக் காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் உண்மையான முகங்கள் அவர்கள் என்ன பண்ணுகிறார்கள்? எப்படி சண்டை போட்டார்கள் என்பதை தொடர்ந்து 100 நாள் பார்த்து வருவதால் அந்த நிகழ்ச்சி முடிய போகிறது. இனிமேல் அவர்களை சந்திக்க முடியாது என்ற ஒரு வருத்தம் நிச்சயம் அனைவரது மனதிற்குள் வந்துவிடும்.

அப்படித்தான் இந்த முறை ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியும் ஆரம்பத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்றிருந்தாலும் தற்போது முடிவை நெருங்கியதால் இருக்கிற இன்னும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து பார்க்கலாம் என்று மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட எட்டு போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே எலிமினேட் ஆகி போன பழைய போட்டியாளர்களையும் உள்ளே வரவைத்து இருக்கிறார்கள்.

அவர்கள் வந்ததும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒவ்வொருவருடைய கேரக்டரும் எப்படி இருக்கிறது என்பதை கொட்டும் விதமாக தொடர்ந்து பல போட்டியாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அருணவ் சொன்னதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக அருண் பேசியதும், விஷாலை வச்சு செய்யும் அளவிற்கு சுனிதா மற்றும் ரியா தரமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி ரவீந்தர் உள்ளே போனதும் எந்தவித நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் பெருசாக கொடுக்காமல் யார் என்ன சொன்னாலும் நம்மளுடைய சீசன் தான் இருப்பதிலேயே பெஸ்ட் என்று சொல்லி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் சந்தோசப்படுத்தி விட்டார். அத்துடன் அருணின் உண்மையான குணத்தை பாராட்டும் விதமாக ரவீந்தர் சொன்னது என்னவென்றால் நான் மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் கிளம்பியதும் வீட்டில் இருப்பவர்கள் உடம்பு சரியில்லாத பொழுது எதற்காக போக வேண்டும் என்று கேட்டார்கள்.

அவர்களிடம் நான் சொல்லிட்டு வந்தது ஒரே ஒரு விஷயம்தான். என்னைப் பார்த்துக் கொள்ள வீட்டுக்குள் மனிதாபிமானம் கொண்ட அருண் உள்ளே இருக்கிறார். அவரை நம்பி நான் போகலாம் என்று சொல்லிட்டு வந்தேன் என்ற சொன்ன அந்த ஒரு விஷயம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. நிச்சயம் அருணுக்கும் இந்த ஒரு வார்த்தை மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கும்.

ஏனென்றால் அவருடைய உண்மையான கேரக்டருக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்காமல் தான் கிட்டத்தட்ட 92 நாட்களாக உள்ளே பயணித்து வருகிறார். அதை எல்லாம் சரி செய்யும் விதமாக ரவீந்தர் சொன்னது மிகப்பெரிய ஆறுதலாக அவருக்கு இருந்திருக்கும். அந்த வகையில் மனிதாபிமானம் என்ற ஒரு விஷயத்தை விட வேறு என்ன அவருக்கு வேணும், இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக தான் அவர் நினைப்பார்.

பிக் பாஸ் டைட்டிலும் வேண்டாம் பணமும் வேண்டாம் எனக்கு இந்த ஒரு வார்த்தையை போதும் மக்களுக்கு நான் யார் என்று புரிந்து இருக்கும் என்ற சந்தோஷத்தில் அருண் ஜெயித்துக் காட்டிவிட்டார். மேலும் தற்போது எட்டு போட்டியாளர்கள் இருப்பதால் இந்த வாரத்தில் நடுவே ஒரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். அந்த வகையில் நாளை பவித்ரா வெளியேறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது என்பதால் டைட்டிலை யார் கைப்பற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News