செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

சீரியலில் மக்கள் மனம் கவர்ந்த விருதை கைப்பற்றிய ஜோடிகள்.. கெமிஸ்ட்ரியை தூக்கலாக காட்டிய சன் டிவி

Sun TV Award: கலைஞர்களை பாராட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு சன் டிவி மூலம் விருது வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது.

இதில் பேவரைட் கதாநாயகன் கதாநாயகி விருதை சிங்க பெண்ணே சீரியல் மூலம் நடித்து வரும் அன்பு ஆனந்தி கேரக்டருக்கு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாழுகின்ற மனிதர்களில் ஒருவராக இறந்த பிறகும் அவரை கௌரவப்படுத்தி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவிற்கு விருது கிடைத்திருக்கிறது.

அத்துடன் அவருடைய கனத்த குரலை கேட்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் விழுகிறது என்பதற்கு ஏற்ப அனைவரையும் நடிப்பால் கிரங்கடித்து விட்டார். முக்கியமாக அவருடைய டயலாக் அனைத்தும் ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு நடிப்பு ராஜசனாக அனைவரையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

இவரை தொடர்ந்து சீரியலில் மக்கள் மனதை கவர்ந்த ஜோடி விருதை கைப்பற்றியது யார் என்றால் மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வரும் சூர்யா நந்தினிக்கு தான் கிடைத்திருக்கிறது. இவர்களுடைய கெமிஸ்ட்ரியை தூக்கலாக காட்டி மக்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுவிட்டது. பெஸ்ட் ஹீரோ அவார்டு விருதையும் சூர்யா கைப்பற்றி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து சின்ன திரையில் நடித்துவரும் அனைத்து ஆர்டிஸ்ட்களையும் கவுரவிக்கும் விதமாக ஒவ்வொருவருக்கும் விருதுகளை கொடுத்து சன் டிவியில் உள்ள கலைஞர்களை சந்தோஷப்படுத்தி விட்டார்கள்.

Trending News