வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தல தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்.. ஆதிபுருஷ் பட குழுவை சரமாரியாக வெளுத்தெடுத்த நீதிமன்றம்

Adipurush: இத்தனை வருட திரை வாழ்க்கையில் பிரபாஸ் இப்படி ஒரு பிரச்சனையை நிச்சயம் சந்தித்திருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு ஆதிபுருஷ் அவரை படாத பாடுபடுத்தி வருகிறது. இந்த ஒரு படத்தில் நடித்துவிட்டு அவர் படும் பாடு கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தாலும் டீசர், ட்ரெய்லர் போன்றவை அதை காலி செய்தது.

அதை தொடர்ந்து பட வெளியீட்டிற்கு முன்பாக அனுமாருக்கு சீட்டு ஒதுக்கியது, ராமர் கோவிலுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கியது என ஒவ்வொரு விஷயமும் படத்திற்கு பின்னடைவாக தான் அமைந்தது. இப்படி பல பஞ்சாயத்துக்கு நடுவில் வெளியான படமும் முதல் நாளிலேயே கடும் விமர்சனங்களை சந்தித்தது.

Also read: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க.. ஆதிபுருஷ் வசூலால் ஆட்டம் கண்ட பிரபாஸின் ஆணிவேர்

அதிலும் ராமாயணத்தையே சொதப்பி இருக்கிறார்கள் என்று வெளிவந்த கருத்து படத்தை மொத்தமாக சரித்து விட்டது. அதைத்தொடர்ந்து இப்போது வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் பட குழு மொத்தமாக தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கிறது.

இந்த சூழலில் தற்போது அலகாபாத் நீதிமன்றம் ஆதிபுருஷ் பட டீமுக்கு சரியான ஒரு குட்டு வைத்திருக்கிறது. அதாவது இப்படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையிலும், சில காட்சிகள் மோசமாகவும் சித்தரிக்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

Also read: ஆதிபுருஷ் 2ம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கா.. பிரபாஸின் பதில் என்ன தெரியுமா?

அதன்படி நீதிமன்றம் தணிக்கை குழுவினரையும், படக்குழுவினரையும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறது. அதாவது நாட்டு மக்களை என்ன அறிவில்லாதவர்கள் என்று நினைத்தீர்களா, இப்படத்தில் சில காட்சிகளும், வசனங்களும் ஏற்புடையதாக இல்லை. படத்தை பார்த்துவிட்டு மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சரியம் என்று சரமாரியாக வெளுத்து விட்டிருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் பிரச்சினை போதாது என்று இப்போது நீதிமன்றமும் தன் பங்குக்கு படக்குழுவினரை சாடி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பிரபாஸ் பிரம்மாண்ட படத்திற்கு ஆசைப்பட்டு இப்போது தனக்கு இருந்த பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து அல்லல்பட்டு வருகிறார்.

Also read: சென்னையில் வளர்ந்து அக்கட தேசத்தை மிரளவிடும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச லெவலில் புகழ்பெற்ற பாகுபலி ஹீரோ

Trending News