வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அவதார் 5ம் பாகம் வரை ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. திக்குமுக்காடிய ஹாலிவுட்

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அப்போதைய அமெரிக்க டாலரில் 237 கோடி மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி வசூலில் வேட்டையாடியது.

அதுமட்டுமல்லாமல் 2010 ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் 9 பிரிவுகளின் கீழ் விருதுகளைத் தட்டிச் சென்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2014 ஆம் ஆண்டே இயக்க திட்டமிட்டிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் சில காரணங்களால் 2017 ஆம் ஆண்டு தான் இப்படத்தை துவங்கினார்.

மேலும் அவதார் 2 படத்துடன் சேர்த்து அவதார் படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கி வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அவதார் 2 படம் ரிலீஸ் ஆகயுள்ளது என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.. இப்படத்திற்கு தி வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் 250 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்டுள்ளது.

அவதார் 2 படம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் ரிலீஸ் தேதியும் அறிவித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப் போனதால் படக்குழு அடுத்தடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பை எடுத்துள்ளனர்.

அதாவது 2024 இல் டிசம்பர் 20 அவதார் படத்தின் மூன்றாம் பாகம், 2026 டிசம்பர் 18 அவதார் படத்தில் நான்காம் பாகம் மற்றும் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அவதார் படத்தின் ஐந்தாம் பாகம் வெளியாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு வருட இடைவெளியில் டிசம்பர் மாதம் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகயுள்ளது.

மேலும் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்த வசூலில் வேட்டையாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதால் உலகம் முழுவதும் உள்ள அவதார் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Trending News