
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு அரசியை காதலித்தது பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்காக தான் என்று புரிந்து கொண்ட குமரவேலுவின் அம்மா, இனி அரசியை பார்த்து பேசி பிரச்சனை பண்ண மாட்டேன் என்று சத்தியம் பண்ண சொல்லி கேட்கிறார். அதுவும் உங்க அப்பா மீது சத்தியம் பண்ணு என்று கேட்ட நிலையில் குமரவேலுவும் அம்மா சொன்னபடியே சத்தியம் செய்து விடுகிறார்.
இருந்தாலும் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தும் அளவிற்கு வார்த்தையால் நோகடித்து விட்டார். இதனால் நொறுங்கிப் போன பாண்டியன் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கூடவே கிளம்பிய பிள்ளைகளிடமும் என் மீது மதிப்பு மரியாதையும் இருந்தது என்றால் என் பின்னாடி யாரும் வராதீங்க என்று சொல்லிவிடுகிறார்.
பாண்டியன் எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே நடந்து அரசி செய்ததை நினைத்து பீல் பண்ணிக் கொண்டே போகிறார். அரசி காதலித்ததை விட குமரவேலுவை காதலித்தது தான் அந்த குடும்பத்திற்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. அந்த அளவிற்கு குமரவேலு பல விஷயங்களில் மோசமாக நடந்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனை எப்படி இந்த அரசி நம்பலாம் என்பதுதான் பாண்டியன் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாண்டியன் வீட்டை விட்டு போகி ரொம்ப நேரம் ஆகியும் காணவில்லை என்பதால் மீனா, செந்தில் மற்றும் கதிரை வெளியே போய் பாத்துட்டு வரச் சொல்கிறார்கள். கூடவே பழனிவேலும் கிளம்பிய நிலையில் எல்லா பக்கமும் தேடிப் பார்க்கிறார்கள் எங்கேயும் காணவில்லை. இதனால் வீட்டிற்கு வரும் பொழுது பாண்டியன் இல்லாமல் தான் வாரிசுகள் வருவார்கள். பாண்டியன் மனசு ஆறும் வரை வீட்டிற்கு வரப் போவதில்லை. சக்திவேலும் கொஞ்சம் ஓவராக பேசியதால் பாண்டியன் ரொம்பவே கலங்கிவிட்டார்.