Gossip : டாப் 10 நடிகர்களுள் இடம்பெறும் நடிகர் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்து வருகிறது. அதுவும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அதனாலேயே பல கோடிகள் முதலீடு செய்து அந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். ஆனால் அந்த படம் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறி அவருக்கே எதிர்வினையாகிவிட்டது. இதனால் நடிகை பெயர் மொத்தமாக இணையத்தில் டேமேஜ் ஆகிவிட்டது.
இதனால் கடுப்பான நடிகரின் மனைவி வன்மத்தை கட்டி வருகிறார். அவரும் சினிமாவில் தற்போது நடித்தவரும் நிலையில் தென்னிந்திய சினிமாவை பற்றி சில மோசமான கருத்துக்களை சமீபத்தில் பேசி இருந்தார்.
மனைவியால் நடிகரின் கேரியருக்கு ஏற்பட்ட ஆபத்து
வளர்த்துவிட்ட சினிமாவை இப்படி பேசியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் தன்னுடைய கணவரை பாலிவுட் படங்களில் நடிக்க வைத்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார். ஆனால் அங்கு நடிகரால் ப்ரைட்டாக முடியவில்லை.
மேலும் நடிகை தனது குடும்பத்துடன் அங்கு செட்டிலாகி படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் ஹீரோ இப்போது நமக்கு தென்னிந்திய சினிமா தான் வொர்க் அவுட்டாகும் என தீவிரமாக படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் நடிகை சமீபத்தில் கொடுத்த பேட்டி அவருக்கு பேக் ஃபயர் ஆகிவிட்டது. மனைவி தென்னிந்திய சினிமாவை பற்றி மோசமாக பேசிவிட்டு கணவனை மட்டும் இங்கே நடிக்க வைக்கிறார் என்று ஏசி வருகின்றனர்.