சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராதிகாவுக்கு வரப்போகும் ஆபத்து.. மொத்த பழியும் பாக்யா மீது போடப் போகும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்துடன் தான் கதை ஆரம்பித்தது. ஆனால் போகப் போக யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். இரண்டு பொண்டாட்டி இரண்டு கணவர் என்ற கதையை கொண்டு வந்து எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையே பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கு ஏற்ப மட்டமாக கதை நகர்ந்து வருகிறது.

அந்த வகையில் ராதிகா, கர்ப்பமாக இருக்கிறேன் என்ற உண்மையை பாக்யாவிடம் சொல்லிவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சியில் நின்ன பாக்யாவிடம் ராதிகா உங்களுக்கு ஏதாவது சங்கடமாக இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்க உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சங்கடத்தில் இருக்கும் பாக்யா

நல்லா சாப்பிடுங்கள் என்று சொல்லி வாழ்த்துக்களையும் கூறுகிறார். அடுத்து தனியாக நின்று கொண்டிருந்த பாக்யா கோபியுடன் இருந்த வாழ்க்கையும் பிரிந்து போன சூழ்நிலையும் நினைத்துப் பார்த்து கவலைப்படுகிறார். கோபி ராதிகாவை கல்யாணம் பண்ணும் பொழுது கூட இந்த அளவிற்கு பாக்கியா உடைஞ்சு போகவில்லை.

ஆனால் தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் ரொம்பவே நொறுங்கிப் போய்விட்டார். பிறகு பழையபடி அழுத அழுகை எல்லாம் துடைத்துவிட்டு வீட்டு வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கோபி வழக்கம்போல் பாக்யாவை கடுப்பேற்றும் விதமாக பிசினஸ் நல்லா போய்க்கிட்டு இருக்கிறது என்பது போல் ஓவராக ஆட்டம் காட்டுகிறார்.

அடுத்து கிச்சனுக்கு போயி பாதாம் பிஸ்தா எங்கே என்று தேடுகிறார். உடனே அங்கே இருந்த பாக்யாவிடம் கேட்கிறார். அதற்கு பாக்யா, இது எல்லாத்தையும் பார்க்கிறது தான் என்னுடைய வேலையா என்று கேட்டு முதல்ல இங்கிருந்து கிளம்புங்க என்று கோபமாக பேசுகிறார்.

உடனே எதுவும் புரியாத கோபி ஏன் பாக்கியா இப்படி பேசினார் என்று குழப்பத்திலேயே ராதிகாவிடம் வந்து சொல்கிறார். அதற்கு ராதிகா நான் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை பாக்கியவிடம் சொல்லிவிட்டேன் என்று கூறுகிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சியாகிறார். தற்போது இந்த உண்மை அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.

மேலும் இந்த கதையை அடுத்து இப்படி மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது ராதிகாவிற்கு ஏதாவது பிரச்சனை வரும் மாதிரி காட்டிவிட்டு அதற்கு பாக்கியா தான் காரணம் என்கிற மாதிரி கோபி திசை திருப்பப் போகிறார். இதுதான் சான்ஸ் என்று ஈஸ்வரியும் பாக்யாவை குறை சொல்லி திட்ட போகிறார். ஆக மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் இந்த சீரியல் பார்க்க கண்றாவியாக தான் இருக்கிறது.

Trending News