திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயராம் குறித்து அவிழ்த்துவிட்ட மகள்.. பொன்னியின் செல்வன் படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டுருக்காரா!

கல்கியின் நாவலை படமாக்கிய மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில் 80 கோடியை வசூலித்து இருக்கிறது. 2ம் நாளில் 150 கோடிக்கு மேல் வசூலை தாண்டி பாக்ஸ் ஆபீசை மிரள வைத்திருக்கிறது.

இந்நிலையில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருக்கும் இந்த படத்தின், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த மணிரத்னம், அதற்காகவே அவர்களை செதுக்கியிருக்கிறார். அதிலும் முக்கியமாக ஆழ்வார்கடியான் நம்பி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார்.

Also Read: பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

இந்த கதாபாத்திரத்திற்காக அவர் எப்படிப்பட்ட கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 6 அடி உயரத்தில் இருக்கும் ஜெயராம், நம்பி கதாபாத்திரம் குட்டையாக இருக்க வேண்டும் என்பதற்காக படம் முழுவதும் ஐந்தரை அடி உயரத்திற்கு குனிந்து நடித்திருக்கிறார்.

இதனால் அந்தப் படம் முடியும்வரை வீட்டிலும் குனிந்தபடியே தான் நடப்பார் என்று அவருடைய மகள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ஜெயராம் இந்த படத்திற்காக தலைமுடி, மீசை, தாடி என அனைத்தையுமே அகற்றியிருக்கிறார்.

Also Read: படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி பெற்ற 4 பிரபலங்கள்.. வந்தியத்தேவனுக்கு டஃப் கொடுத்த 3 நடிகைகள்

கதைப்படி ஆழ்வார்கடியான் நம்பி என்னும் கதாபாத்திரத்தில் ஜெயராம் தொப்பையுடன் இருக்க வேண்டும். ஆனால் அவர் தொப்பையில்லாமல் இருந்திருக்கிறார். இதை பார்த்த மணிரத்தினம் கொஞ்சம் பூசினார் போன்று தொப்பையுடன் வாருங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்காக ஜெயராமும் கஷ்டப்பட்டு உடலை ஏற்றி தொப்பையுடன் வந்திருக்கிறார்.

ஆனாலும் திருப்தி அடையாத மணிரத்தினம் ஜெயராமை மட்டும் தினமும் இரவு பீர் கொடுத்து குடிக்க சொல்லி இருக்கிறார். குடிக்கும் பழக்கம் இல்லாத ஜெயராம், அதையும் அந்த கதாபாத்திரத்திற்காக செய்துள்ளார். இவ்வளவு சிரமப்பட்டு தான் ஜெயராம், நம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்ற விஷயம் தற்போது படம் ரிலீஸான பிறகு ஒவ்வொரு தகவலாக வெளிவருகிறது.

Also Read: நினைத்த மாதிரியே ஏற்பட்ட சிக்கல்.. பொன்னியின் செல்வனால் தவிக்கும் அண்ணன் தம்பி

சினிமாவில் பல வருடங்கள் இருக்கும் ஜெயராம், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக அவருடைய நெகட்டிவ் எல்லாவற்றையும் துறந்து பாசிட்டிவாக மாற்றி பெருமை தேடி இருக்கிறார்.

Trending News