Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பல நாள் திருடன் ஒரு நாள் ஆகப்படுவான் என்று சொல்வதற்கு ஏற்ப ரோகினி அடுத்தடுத்த விஷயங்களில் மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 30 லட்ச ரூபாய் விசயத்தில் மட்டுமே மாட்டிக்கொண்டு மத்த விஷயத்தில் ரோகினி எஸ்கேப் ஆகிவிட்டார். இருந்தாலும் ரோகிணிக்கு இது பத்தாது இனி ஒவ்வொரு விஷயமும் வெளிவர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
அந்த வகையில் இனி அடுத்து வரும் நாட்களில் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை, மலேசியாவில் ரோகினியின் அப்பாவும் இல்லை. நடுத்தர குடும்பத்தில் படித்து வந்த பொண்ணு தான் ரோகிணி என்ற உண்மை வெளிவரப் போகிறது. அதாவது நமக்கு தெரிந்த விஷயம் அனைத்தும் முத்துவுக்கு தெரியும் படி ரோகிணி அப்பா மலேசியாவில் இல்லை என்பது முத்துவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
பணக்கார வீட்டு பொண்ணா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது, அத்துடன் ரோகிணி விஷயத்தில் ஏதோ மர்மங்கள் நிறைந்து இருக்கிறது என்று முத்து கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதற்கான தகுந்த ஆதாரங்கள் வேண்டும் என்று மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் முத்து காரில் சவாரிக்கு வந்த மூத்த தம்பதியர்கள் மலேசியாவில் இருந்து வந்தார்கள் என்பதால் ரோகிணி அப்பா பற்றி விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
அதனால் அவர் மூலம் ரோகிணியின் அப்பா எந்த இடத்தில் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று விஜயா மூலம் ஒரு கதை நகர்ந்தது. இதில் நாம் மாட்டி விடக்கூடாது என்பதற்காக ரோகினி பல் வலி என்று ஒரு ட்ராமாவை போட்டு வீட்டில் இருப்பவர்களே நம்ப வைத்து மலேசியா தம்பதிகளிடமிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனாலும் சுருதியிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு ஏற்ப பல் வலியால் இருக்கும் ரோகினையே சுருதி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனார்.
அங்கே போய் ஒத்த பல்ல புடுங்க வச்சு மொத்தமாக ரோகினியை அல்லல்படுத்தி விட்டார். அடுத்ததாக முத்துவின் நண்பர் ஒருவர் துபாய்க்கு போகுவதால் பார்ட்டிக்கு சரக்கு வாங்கிட்டு வந்து எல்லோரும் சேர்ந்து குடிக்கலாம் என்று கூப்பிடுகிறார். உடனே முத்து மீனாவிடம் பெர்மிஷன் கேட்க வேண்டும் என்று மீனாவுக்கு போன் பண்ணி விவரத்தை சொல்லி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் குடிப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கெஞ்சுகிறார்.
அந்த வகையில் முத்துவிற்காக மீனாவும் சம்மதம் கொடுத்த நிலையில் முத்து அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பார்ட்டி பண்ணுவதற்கு தயாராகி விடுவார்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு கதை வைத்து இதில் ரோகினி பற்றிய ஒரு விஷயத்தை வெளி கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது முத்து அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கும் பொழுது அங்கே ரோகினையின் மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை பிரவுன்மணியை சந்திக்கப் போகிறார்.
அப்பொழுதுதான் இவர் மலேசியாவில் இருந்து வந்தவர் இல்லை, ரோகினியின் மாமாவும் இல்லை என்ற உண்மை தெரிந்து கொண்டு நடிப்பதற்காக ரோகினி கூட்டிட்டு வந்த ஆள் என்ற விவரமும் முத்துக்கு தெரிய வந்துவிடும். உடனே முத்து இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி ரோகினிக்கு அடுத்த ஆப்பை வைத்து விடுவார். இந்த விஷயத்தில் இருந்து தப்பிக்க முடியாத ரோகினி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்ற உண்மையையும் போட்டு உடைத்து விட போகிறார். இதன் பிறகுதான் விஜயா மற்றும் மனோஜின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கப் போகிறோம்.