ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

காதலை மறக்க முடியாமல் காவியா எடுத்த விபரீத முடிவு.. கேட்க கூடாததை கேட்டதால் ஆடி போன கணவர்

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே2 சீரியலில் உருகி உருகி காதலித்த காவியா-ஜீவா இருவரையும் பிரித்து, காவியாவை ஜீவாவின் அண்ணன் பார்த்திபனுக்கும், ஜீவாவை காவியாவின் அக்கா பிரியாவுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் ஒரே வீட்டில் காதலனைப் பார்த்துக் கொண்டே கணவனுடன் வாழ முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் காவியா, பார்த்திபனை விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுக்கிறாள்.

ஆனால் பார்த்திபன் எப்படியாவது காவியாவின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவளுடன் வாழவே விரும்புகிறான். இது ஒருபுறமிருக்க பார்த்திபனை அவனுடைய அத்தை மகள் ரம்யா, சிறுவயதிலிருந்தே பார்த்திபனை வெறித்தனமாக காதலிக்கிறாள். ஆகையால் திருமணமான பிறகு பார்த்திபனை காவியாவிற்கு விட்டுக்கொடுக்க முடியாமல் பார்த்திபனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

தற்போது கூட காவியாவை காணும் என்று பார்த்திபன் மழையில் தேடியதால் காய்ச்சல் ஏற்பட்ட பார்த்திபனுக்கு, ரம்யா பக்கத்தில் இருந்தே வேண்டிய உதவிகளை செய்கிறாள். இதைப்பார்த்த காவியா, பார்த்திபனுக்கு ரம்யா தான் சரியான மனைவியாக இருக்க முடியும்.

ஆகையால் பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்டால் ரம்யா, பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு இருவரும் சந்தோசமாக வாழ்வார்கள். ஏற்கனவே பார்த்திபனை வெளிப்படையாகவே ஒதுக்கும் காவியாவை வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பிடிக்காது. ஆகையால் விவாகரத்து செய்து கொள்ளும் போகும் விஷயம் தெரிந்தால் அவர்களும் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று பார்த்திபனை காவியா சமாதானப் படுத்துகிறாள்.

இதற்காக அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த விவாகரத்து பாத்திரத்தையும் பார்த்திபனிடம் காவியா கொடுத்து, ‘உங்களுக்கு ஏற்ற சரியான மனைவி நான் கிடையாது. எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள்’ என்று கேட்கிறாள்.

இதைக் கேட்டதும் பார்த்திபன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். இதற்கு நிச்சயம் பார்த்திபன் சம்மதிக்க மாட்டான். அதுமட்டுமின்றி பார்த்திபனின் அப்பா, அம்மா இருவரும் எப்படியாவது காவியா கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திபனை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதால் அவர்களின் நம்பிக்கையை கெடுக்க கூடாது என்பதற்காகவே பார்த்திபன் காவியாவை விவாகரத்து செய்ய மாட்டான்.

Trending News